Trending News Tamil News Website In Trichy

கார் மட்டும் தனியாக இருந்தது, செருப்பு கிடந்தது..– ஸ்ரீரங்கம் திமுக நிர்வாகி ராம்குமார் எங்கே? மனைவி கண்ணீர் மல்க பரபரப்பு புகார்

0

திருச்சி- 01.10.26

ஸ்ரீரங்கம் திமுக பகுதி செயலாளர் ராம் குமார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் – தன் கணவர் நிலை என்ன என்பது குறித்து தெரியாமல் ராம்குமாரின் மனைவி வேதனை

திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் திமுக பகுதி செயலாளர் ஆக இருப்பவர் ராம்குமார் இவர் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை தன் பெயருக்கு மாற்றி அந்த நிலத்தை அபகரித்து விட்டதாக ஸ்ரீரங்கம் கோவில் இணையானையர் சிவராம் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் ராம்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேண்டும் எனக் கூறி ராம்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இன்றும் அந்த வழக்கு விசாரணை நடைபெற உள்ள நிலையில் அது தொடர்பாக அவர் நீதிமன்றத்திற்கு செல்ல மதுரைக்கு சென்று கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் திருச்சி, பஞ்சப்பூர் அருகே திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரில் இருந்த அவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து பேசிய ராம்குமாரின் மனைவி ஆண்டாள் ராம்குமார்,

 

நான் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறேன் என் கணவர் தான் என்னை பார்த்து வருகிறார். இன்று காலை அவர் கோவிலுக்கு சென்று விட்டு மதுரைக்கு வழக்கு தொடர்பாக செல்வதாக கூறிவிட்டு சென்றார். அவருடைய காரில் தான் சென்றார் இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எங்களுடைய ஓட்டுநர் அவர் சென்ற பகுதிக்கு பார்த்த பொழுது பஞ்சபூர் அருகே அவருடைய கார் மட்டும் தனியாக இருந்தது அங்கு அவருடைய செருப்பும் கிடந்துள்ளது. நாங்கள் விசாரிக்கையில் சிலர் அவரை பின்தொடர்ந்து சென்று உள்ளதாக தெரிகிறது.போலீசார் அவரை கைது செய்திருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம்.

ஏற்கனவே அவர் மீது பொய் வழக்கு போட்டு உள்ளார்கள் அந்த வழக்கு தொடர்பாக முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் அது விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் அவரை கைது செய்து இருப்பார்களோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது என்னுடைய கணவரை காணவில்லை என கூறி நான் போலீசாருக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளேன்.எனக்கு உடல்நிலை சரியில்லாததால் நேரில் சென்று புகார் அளிக்க முடியாது அதனால் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளேன். இதில் போலீஸ் விசாரணை செய்து என் கணவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து உரிய விவரத்தை போலீசார் தெரிவிக்க வேண்டும் என் கணவரை வேறு யாரும் கடத்திச் சென்றிருக்க வாய்ப்பில்லை போலீசார் தான் அழைத்துச் சென்று இருக்க வேண்டும் எங்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை உள்ளது என் கணவர் ராம்குமார் எங்கு உள்ளார் என்பது குறித்து போலீசார் தெரிவிக்க வேண்டும் நான் புகார் அளித்தும் இதுவரை போலீசார் யாரும் என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை என் கணவரின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை. தயவு செய்து அவரை போலீசார் கண்டுபிடித்து தர வேண்டும் அல்லது அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.ஜாமீன் மனு விசாரணைக்கு வர உள்ள நிலையில் ராம் குமாரை போலீசார் கைது செய்திருப்பதாக அவர் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால் போலீசார் தரப்பில் ராம்குமார் கைது உறுதிப்படுத்தாமல் உள்ளனர் இதனால் அவர் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.