Trending News Tamil News Website In Trichy

*ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத நேர்மையான வேட்பாளர்- ஸ்ரீரங்கத்தில் இரட்டை இலைக்கே வெற்றி என மனோகரன் அதிரடி*

0

திருச்சி

*குற்றச்சாட்டுகள் இல்லாத நேர்மையான அரசியல்- ஸ்ரீரங்கத்தில் இரட்டை இலைக்கே வெற்றி – அதிமுக வேட்பாளர் மனோகரன் அதிரடி வாக்கு சேகரிப்பு*

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் திரு. மனோகரன் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக மணிகண்டம் ஒன்றியம், சோமரசம்பேட்டை, அல்லித்துறை, குமார வயலூர், அதவத்தூர், தாயனூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர்: எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளும் இன்றி, நேர்மையாக அரசியல் செய்து நேரடியாக மக்களைச் சந்தித்து வருகிறேன். மக்களின் தேவைகளை அறிந்த எனக்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

 

கடந்த திமுக ஆட்சியில் ஸ்ரீரங்கம் தொகுதியின் நிலை குறித்து வேட்பாளர் மனோகரன் முன்வைத்த முக்கியக் குற்றச்சாட்டுகள்: சாலைகள் குண்டு குழியுமாக உள்ளன; குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை போன்ற அடிப்படைத் தேவைகளைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் அதிகாரிகள் நேரடியாக கிராமங்களுக்கே சென்று குறைகளைத் தீர்த்தனர். அதே போன்றதொரு பொற்கால ஆட்சியை மீண்டும் எடப்பாடியார் தலைமையில் கொண்டு வருவோம்.

ஸ்ரீரங்கம் தொகுதியின் வளர்ச்சிக்காக மனோகரன் வழங்கிய உறுதிமொழிகள்:

பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வெளிவட்டச் சாலை (Ring Road) பணிகளை முழுமையாக முடித்து போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மாநகராட்சியாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ள சோமரசம்பேட்டை, அல்லித்துறை, அதவத்தூர் பகுதிகள் தொடர்ந்து ஊராட்சிகளாகவே நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாடகை கட்டிடத்தில் இயங்கும் ரேஷன் கடைகளுக்குச் சொந்தக் கட்டிடம் கட்டப்படும். நீண்ட நாள் கோரிக்கையான மின் மயான வசதி மற்றும் இதர அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்படும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.