Trending News Tamil News Website In Trichy

❤️ “எங்க எம்.எல்.ஏ… எங்க பெருமை” மக்களின் அன்பில் நனைந்த எஸ். கதிரவன்- மண்ணச்சநல்லூர் இனி ‘தன்னிறைவு’ தொகுதி.

0

திருச்சி

மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் எம்எல்ஏ எஸ்.கதிரவன் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

முசிறி மேற்கு ஒன்றியம் வாளவந்தி, மங்கலம், துலையாநத்தம், பேரூர், ஜெயங்கொண்டான் ஊராட்சிகளில் மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். அப்பொழுது மேளதாளம் முழங்க ஆரத்தி எடுத்து வரவேற்ற அப்பகுதி மக்கள், எங்கள் பகுதிகளில் கவுன்சிலர்களை பார்ப்பதே எங்களுக்கு அரிதாக இருந்தது.

ஆனால் நீங்கள் அடிக்கடி வந்து எங்களை சந்தித்து குறைகளை கேட்டு தேவைகளை நிவர்த்தி செய்து கொடுத்துள்ளீர்கள். தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு தூய்மையான குடிநீர் கிடைக்கிறது. குண்டும் குழியுமான சாலைகளில் சங்கடப்பட்டு வந்த எங்களுக்கு ஃபேவர் பிளாக் சாலைகள், கான்கிரீட்சாலைகள், தார் சாலைகள் என தரமாக அமைத்துக் கொடுத்து அசத்தி விட்டீர்கள். பள்ளிக்கூடங்களுக்கு புதிய கட்டடம், புதிய சமுதாயக் கூடங்கள், நீர்நிலைகள் மேம்பாட்டு திட்டங்கள், ஆழ்துளை கிணறுகள், வடிகால் வசதி, விண்ணப்பித்த அனைவருக்கும் பசுமை வீடுகள், கலைஞர் கனவு இல்லம் நிறைவேற்றி தந்துள்ளீர்கள். ஏழை மக்களுக்கு ஆட்டு கொட்டகை, மாட்டு கொட்டகை என எண்ணிலடங்கா வகையில் அமைத்துத் தந்து எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளீர்கள்.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாய் எங்கள் ஆரோக்கிய வாழ்வுக்கு தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளித்து வருகிறீர்கள். கேட்டதையெல்லாம் கேட்டபோதும், கேட்காததையும் மனதறிந்து கொடுத்த உங்களுக்கு எங்கள் ஆதரவு என்றென்றும் தொடரும் என்று உற்சாகமாக கூறி வாழ்த்தினர்.

அப்போது எம்எல்ஏ எஸ் கதிரவன் பேசுகையில் மணச்சநல்லூர் தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றுவது என் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறேன். கடந்த ஐந்தாண்டு காலத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றி தந்துள்ளேன். இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றதும் அனைத்து கிராமங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவேன்.

விவசாய பணிகள் கட்டிட பணிகள் ஆகியவற்றிற்கு சட்டமன்ற அலுவலகத்தில் ஜேசிபி ஹிட்டாச்சி இயந்திரங்களை நிறுத்தி வைத்திருப்பேன் டிரைவரும் தயாராக இருப்பார். உங்களுக்கு தேவையான போது முன்பதிவு செய்து இலவசமாக நீங்கள் எடுத்துச் சென்று உங்கள் பணிகளை முடித்துக் கொண்டு அனுப்பி விடலாம். என் தொகுதி மக்களுக்கு என்ன தேவை என்பதை எண்ணி எண்ணி செயல்படுத்துவேன். எனவே உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மீண்டும் எனக்கு வாய்ப்பு தர வேண்டும். இவ்வாறு திமுக வேட்பாளர் கதிரவன் பேசினார்.

மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் திமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.