Trending News Tamil News Website In Trichy

மதவெறி அரசியலை வீழ்த்த திமுக தலைமையேற்க வேண்டும்- இந்திய சோஷலிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் முனைவர் தமீமுல் அன்சாரி ரஹ்மானி அதிரடி அறைகூவல்

0

திருச்சி 7.02.2026

மதவெறி அரசியலை வீழ்த்த திமுக தலைமையேற்க வேண்டும்-

இந்திய சோஷலிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் முனைவர் தமீமுல் அன்சாரி ரஹ்மானி அதிரடி அறைகூவல்

இந்திய அளவில் மதவாத சக்திகளை முறியடிக்கவும், சமூக நீதியை நிலைநாட்டவும் ஒரு வலுவான நல்லிணக்க கூட்டணி உருவாக வேண்டும். அந்தப் கூட்டணிக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக தலைமை தாங்க வேண்டும் என இந்திய சோஷலிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் பன்முகத்தன்மையைக் காக்க ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும். தமிழகத்தில் மதவாதத்தைத் தடுத்து நிறுத்திய திமுக-வால் மட்டுமே தேசிய அளவில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

இது வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல, இந்தியாவின் ஆன்மாவைக் காப்பதற்கான அறப்போர்.

நிர்வாகிகள் கூட்டத்தில் முனைவர் தமீமுல் அன்சாரி ரஹ்மானி விடுத்த இந்த அறைகூவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.