திருச்சியில் காவேரி மருத்துவமனையின் 11-வது மாரத்தான்- 7,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு – ரூ.3 லட்சம் பரிசுத் தொகை வழங்கி கௌரவம்
திருச்சி 27.09.2026
உலக இதய தினம் திருச்சியில் காவேரி மருத்துவமனையின் 11-வது மாரத்தான் – 7,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
உலக இதய தினத்தை முன்னிட்டு திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட 11-வது ‘காவேரி மாரத்தான்’ போட்டியில் 7,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
இதய ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில், 21.1 கி.மீ (அரை மாரத்தான்), 10 கி.மீ (சேலஞ்ச் ரன்) மற்றும் 5 கி.மீ (ஃபன் ரன்) ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் அமைக்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ரூபாய் 3 லட்சம் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது.திருச்சி காவேரி மருத்துவமனையின் செயல்பாட்டு இயக்குநர் திரு. அன்புச்செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. V. பாலகிருஷ்ணன், ஐ.பி.எஸ்., தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்ட வன அலுவலர் DFO திருமதி. எஸ். கிருத்திகா, ஐ.எஃப்.எஸ்., கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், திருச்சி மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ஜி.சி. கோபிநாத் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திருமதி. பி. அகல்யா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், காவேரி மருத்துவமனை குழுமம், பேசுகையில், “காவேரியின் பயணத்தில் திருச்சிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. எங்கள் மருத்துவமனை தொடங்கிய இடம் இதுதான். இந்த நகரத்தில் காவேரி மாரத்தான் 11 பதிவுகளை நிறைவு செய்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு வயதினரை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வளவு உற்சாகத்துடன் பங்கேற்று இருப்பதை பார்ப்பது ஊக்கமளிக்கிறது. ஆரோக்கியமான வாழ்வை நோக்கி மக்கள் திரும்பி இருக்கிறார்கள் என்பதை இது குறிக்கிறது. ஆரோக்கியம் மற்றும் ஒற்றுமையான வாழ்வு ஆகியவற்றின் அடிப்படையில் சமூகத்தை ஒன்று திரட்டும் ஒரு தளமாக காவேரி மாரத்தான் உருவாகி உள்ளதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், என்றார்.