Trending News Tamil News Website In Trichy

அரசு அலுவலகத்தில் தொடரும் அலைக்கழிப்பு- வாரிசு சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாக திருச்சி மேற்கு வட்டாட்சியர் மீது பெண் புகார்-தவெக அரசுக்கு எதிராகப் கொந்தளிப்பு

0

திருச்சி – 17.09.26

*தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது வேறொன்று – பல நாட்களாக அழைக்கழிக்கப்படுகிறேன், முறைப்படி விண்ணப்பித்து வாரிசு சான்றிதழ் தராமல் இழுத்தடிக்கிறார்கள் என பெண் புகார்*

திருச்சி மேல கல்கண்டார்கோட்டை அந்தோணியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் இளஞ்செழியன் இவரது மனைவி மகாலட்சுமி (வயது 59) இவர் தனது சகோதரர் மதுரைராஜுடன் வாரிசு சான்றிதழ் வேண்டி திருச்சி மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர்.

அவரிடம் அதிகாரிகள் வீடு தேடி வாரிசு சான்றிதழ் வரும் என கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இது தொடர்பாக இ.மகாலட்சுமி இன்று நிருபர்களிடம் கூறும்போது;-எனது தந்தைக்கு 2 மனைவிகள்,மற்றும் 5 பிள்ளைகள் உள்ளனர். நான் முதல் தாரத்து மகள் .மருதராஜ் இரண்டாவது மனைவியின் மூத்த மகன் ஆவார். அதாவது சித்தி மகன் நாங்கள் எல்லோரும் சேர்ந்து தான் தந்தை இறப்புக்கு பின்னர் வாரிசு சான்றிதழ் கேட்கின்றோம்.

ஆனால் தாசில்தார் அலுவலகத்தில் எனது தந்தை முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் என கூறி தட்டிக் கழிக்கிறார்கள். ஆனால் இதற்கான அரசு உத்தரவையோ கோர்ட்டு உத்தரவையோ தர மறுக்கிறார்கள். இதனால் கடந்த 1 மாதமாக நாங்கள் அலைக்கழிக்கப்படுகிறோம் என்றார்.தமிழக வெற்றிக்கழக அரசு சட்டமன்றத்தில் அனைத்து பணிகளும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்ச லாவண்யம் இன்றி உடனுக்குடன் பணிகள் நடப்பதாக கூறுகின்றனர். அதனை நம்பி தான் நான் இந்த அலுவலகத்திற்கு வந்தேன் ஆனால் இங்கு நான் தினமும் அலைக்கழிக்கப்படுகிறேன் இதற்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.