விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசு – யாருக்கும் பயனளிக்காத கடன்தள்ளுபடி அறிவிப்பு- தடையை மீறி திருச்சியில் நாளை 45 சங்கங்கள் இணைந்து தொடர் காத்திருப்பு போராட்டம்
திருச்சி – 14.09.2026
முழு பயிர்கடன் தள்ளுபடி கோரி தடையைமீறி தொடர் காத்திருப்பு போராட்டம் – விவசாய சங்கங்கள் அறிவிப்பு
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிபடி முழு பயிர்கடன்களை தள்ளுபடிசெய்யாத நிலையில், தமிழகம் முழுவதும் விவசாயிகள் பலகட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளனர்
அதேநேரம், விவசாயிகள் போராட்டம் நடத்தியும் முழுமையாக பயிர்கடன் அறிவிக்கப்படாமல் பகுதியாக மட்டுமே பயிர் கடன்களை தள்ளுபடி செய்து முதல்வர் அறிவித்துள்ளார்
இது விவசாயிகளை மேலும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கிய நிலையில், சென்னையில் இரண்டு கட்டப் போராட்டங்கள் நடத்தியும் அமைச்சர்களை சந்தித்தும் பயனில்லாதபட்சத்தில், சமயபுரம் அருகே 45க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து கூட்டுறவு பயிர்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்திட கோரி நாளை 15ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில், காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்
இதனை அடுத்து இன்றைய தினம் ஒருங்கிணைப்பாளர் ஈசன் முருகசாமி தலைமையில் விவசாய சங்க தலைவர்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து அனுமதிகோரினர்.
ஆனால் காவல்துறை தரப்பிலோ தொடர் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும் ஒரு நாள் மட்டுமே அடையாள காத்திருப்பு போராட்டம் நடத்த தெரிவித்த நிலையில், காவல்துறையைக் கொண்டு போராட்டத்தை ஒடுக்க முயற்சித்தாலும், நாளைமுதல் தங்களது தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என உறுதிபட தெரிவித்தனர்
தமிழக அரசு அறிவித்துள்ள இந்த கடன்தள்ளுபடி, யாருக்கும் பயனளிக்காதவகையில் பலரும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர், தற்போது கடனை கட்ட முடியாமல் விவசாயிகள் வங்கிகள் மூலம் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவதாகவும், சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் 13 நாட்கள் போராட காவல்துறை அனுமதி அளித்தது.
ஆனால், யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் விவசாயிக்கு சொந்தமான பட்டா நிலத்தில் தொடர் காத்திருப்புபோராட்டம் நடத்த போலீசார் அனுமதிமறுப்பது என்பது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை என்றனர்
இரண்டு முறை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கூறியதை எதையும் அமல்படுத்தவில்லை, மாறாக விவசாயிகள் பெற்ற கடனுக்காக ஜப்தி நோட்டீஸ் மற்றும் ஏலம் நோட்டீஸ் போன்றவற்றை விடுத்து மிரட்டுவதாகவும், போலீசார் கைது எச்சரிக்கையை மீறி 45 விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் தன் எழுச்சியாக இந்த தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்பார்கள் என உறுதிப்பட தெரிவித்தனர்.