Trending News Tamil News Website In Trichy

திருச்சி அருகே ரயில் விபத்தில் அடையாளம் தெரியாத நபர் பலி – உறவினர்களைத் தேடும் காவல் துறை

0

திருச்சி 11.10.2026

திருச்சி அருகே ரயில் விபத்தில் அடையாளம் தெரியாத நபர் பலி – காவல் துறை தகவல்

திருச்சி திருவெறும்பூர் மற்றும் தொண்டைமான்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே நிகழ்ந்த ரயில் விபத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 10.10.2026 அன்று இரவு 8 மணிக்கு முன்பாக நேர்ந்த இச்சம்பவத்தில், ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு தலை துண்டாகி அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. கிருஷ்ணன் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்த உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். தற்போது இதுகுறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த நபர் குறித்த அடையாளம் அல்லது முகவரி ஏதேனும் அறிந்தவர்கள், கீழ்க்கண்ட திருச்சி ரயில்வே காவல் நிலைய எண்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:

தொலைபேசி எண்கள்:

90805 63321, 94434 72524

ரயில்வே காவல் நிலையம், திருச்சி. உயிரிழந்த நபரின் வாரிசுதாரர்கள் அல்லது உறவினர்களைக் கண்டறிய இந்தத் தகவலை அனைவரும் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்து உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.