திருச்சியிலேயே இனி தேசிய அளவிலான NEET, JEE பயிற்சி- அலன் நிறுவனத்தின் புதிய மையம் அண்ணாமலை நகரில் திறப்பு
திருச்சி 24.09.2026
*திருச்சியில் அலன் கரியர் இன்ஸ்டிடியூட் புதிய மையம் திறப்பு: தமிழ்நாட்டில் பயிற்சி பிணையம் விரிவாக்கம்*
போட்டித் தேர்வு பயிற்சி நிறுவனமான அலன் கரியர் இன்ஸ்டிடியூட், தமிழ்நாட்டில் தனது சேவையை விரிவுபடுத்தும் வகையில் திருச்சியில் புதிய மையத்தைத் தொடங்கியுள்ளது. திருச்சி அண்ணாமலை நகரில் அமைந்துள்ள இந்த புதிய மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
விழாவிற்கு அலன் கரியர் இன்ஸ்டிடியூட் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சி.ஆர். சௌத்ரி, தென் மண்டலத் தலைவர் மகேஷ் யாதவ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கல்விப் பிரிவுத் தலைவர் சந்தோஷ் சிங் ஆகியோர் தலைமை வகித்தனர்.திருச்சி சுங்கத்துறை இணை ஆணையர் ஜி.வி. பாண்டியராஜ், ஐ.ஆர்.எஸ்., சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மையத்தைத் திறந்து வைத்தார்.
திறப்பு விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற கலந்துரையாடலில் AIIMS, JIPMER, IIT மற்றும் NIT ஆகியவற்றில் பயிலும் அலன் நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் பங்கேற்று, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் அனுபவங்களை தற்போதைய மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், மையத்தின் உயர்தர உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி முறைகள் குறித்து நிர்வாகிகள் விளக்கமளித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய தலைமை நிர்வாக அதிகாரி சி.ஆர். சௌத்ரி, திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மாணவர்களுக்கு NEET, JEE போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான தரமான கல்வி வழிகாட்டுதல், அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் கட்டமைக்கப்பட்ட கற்றல் சூழலை அவர்களின் அருகிலேயே வழங்குவதே இமையத்தின் முதன்மை நோக்கம் என்றார்.
இப்புதிய மையத்தின் மூலம் மண்டல அளவிலான மாணவர்கள் தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என தென் மண்டலத் தலைவர் மகேஷ் யாதவ் தெரிவித்தார்.