Trending News Tamil News Website In Trichy

போலீஸ் காலில் விழுந்து கெஞ்சிய மூதாட்டி- மகளின் சாவுக்கு நீதி கேட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் குடும்பத்துடன் தர்ணா

0

திருச்சி 2.11.2026

போலீஸ் காலில் விழுந்து கெஞ்சிய மூதாட்டி- மகளின் சாவுக்கு நீதி கேட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் குடும்பத்துடன் தர்ணா

திருச்சி காந்திமார்க்கெட் மணிமண்டப சாலை பகுதியை சேர்ந்தவர் கருப்பையா(வயது 65). இவர் தனது மனைவி மற்றும் பேத்தியுடன் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு  வந்தார். அப்போது ஒரு சிலேட்டில் ‘மாவட்ட நிர்வாகமே… எங்களை கருணைக்கொலை செய்திடுக’ என்று எழுதி கழுத்தில் அணிந்திருந்த கருப்பையா, தனது மனைவி, பேத்தியுடன் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் உட்கார்ந்து, ‘நீதி வேண்டும்… நீதி வேண்டும்…. தனது மகள் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும்’ என்று கோஷங்களை எழுப்பி தர்ணாவில் ஈடபட்டார்.

உடனே அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை சமரசம் செய்து கூட்டரங்கின் உள்ளே அழைத்து சென்றனர். தொடர்ந்து அவர் மாவட்ட வருவாய் அதிகாரி பாலாஜியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகார். மனுவில் தனது மகள் நாகஜோதியை மருமகன் அமிர்தகிருஷ்ணன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாகவும், இதனால் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் நாகஜோதி வழக்கு தொடர்ந்ததாகவும், இனால் வழக்கை வாபஸ் பெற மருமகன் வற்புறுத்தி மிட்டியதால், கடந்த செப்டம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டதாகவும், தற்கொலைக்கு தூண்டிய தனது மருமகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது காந்திமார்க்கெட் போலீசில் புகார் செய்தும், இதுவரை அவர்களை கைது செய்யவில்லை என்றும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இதுபற்றி உரிய விசாரணை செய்வதாக மாவட்ட வருவாய் அதிகாரி கூறியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.