Trending News Tamil News Website In Trichy

திருச்சி மலைக்கோட்டை அம்மன் புதிய திருத்தேர் வெள்ளோட்டம் கோலாகலம்

0

திருச்சி 11.11.2026

*திருச்சி மலைக்கோட்டையில் அம்மன் புதிய திருத்தேர் வெள்ளோட்டம் கோலாகலமாக நடைபெற்றது*

தென் கைலாயம் எனப் போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை திருக்கோயிலில், அம்மனின் புதிய திருத்தேர் வெள்ளோட்ட பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. புதிய திருத்தேருக்கு புண்ணியாக வாகனம், கடஸ்தாபனம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 7 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை மற்றும் புதிய திருத்தேர் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் புதிய திருத்தேர் வெள்ளோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

29 அடி உயரத்தில், ரூ.57,80,000/- மதிப்பில் மரத்தினால் புதியதாக உருவாக்கப்பட்டிருந்த திருத்தேரை காண ஏராளமான பக்தர்கள் மலைக்கோட்டையில் குவிந்திருந்தனர். பக்தர்கள் அனைவரும் தேரை வடம் பிடித்து இழுத்து, அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.