Trending News Tamil News Website In Trichy

மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட பஞ்சாயத்து முடிவதற்குள் போட்டோ எடுப்பதில் அடுத்த மோதல்- திருச்சியில் தவெக எம்.எல்.ஏ-க்கள் ரகளையால் பரபரப்பு

0

திருச்சி 5.10.2026

*சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்ற மெழுகுபடுத்தி காங்கிரஸ் எம் பி எம் வழங்கியதால் மெழுகுவர்த்தியை தூக்கி எறிந்த எம்எல்ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு அடங்குவதற்குள், கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வழங்கும்போது மணப்பாறை எம்எல்ஏ கதிரவனுக்கும் எம் எல் ஏ நவல்பட்டு விஜிக்கும் புகைப்படம் எடுப்பதில் வாக்குவாதம்*

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதிக்தயாள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்து அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் கதிரவன், விக்னேஷ், நவல்பட்டு விஜி, மாநிலங்களவை உறுப்பினர் கிரிஸ்டோபர் திலக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியின் தொடக்கமாக குத்து விளக்கு ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.  அப்போது முதலாவதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் குத்து விளக்கு ஏற்றினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த மணப்பாறை எம்எல்ஏ கதிரவன், முசிறி எம் எல் ஏ விக்னேஷ் மெழுகுவர்த்தியை கொண்டு குத்து விளக்கு ஏற்றினார்கள். இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் குத்துவிளக்கு ஏற்ற மெழுகுவர்த்தியை வாங்கினார் அப்போது திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜி மெழுகுவர்த்தியை தட்டி விட்டு நான் ஏத்தாமல் எப்படி நீங்கள் ஏற்றுவீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அமைச்சர் ரமேஷ் சமாதானம் செய்தார் பின்பு திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜி குத்துவிளக்கு ஏற்றினார் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் குத்து விளக்கு ஏற்றாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்தச் சம்பவத்தால் மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியினர், தமிழக வெற்றிக் கழகத்தை கட்சியினர் இடையே சலசலப்பு பரபரப்பு ஏற்பட்டது.இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது அமைச்சர் ரமேஷ் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்களை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது புகைப்படத்திற்கு நிற்பதற்காக திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜிக்கும் மணப்பாறை எம்எல்ஏ கதிரவனுக்கும் இடையே வாய் மோதல் ஏற்பட்டது. அப்போது அமைச்சர் ரமேஷ் சீர் கொடுத்து கொண்டு இருக்கும்போதே திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜி எதற்காக எங்களை அழைத்தீர்கள் போட்டோவிற்கு நீங்களே நின்று கொள்ளுங்கள் புரோட்டாகால் என்ன என தெரிந்து கொள்ளுங்கள் என ஆவேசமாக பேசினார் இதனால் மீண்டும் தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏக்கள் மட்டுமல்லாமல் நிர்வாகிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் ரமேஷ் கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர் வழங்கி விட்டுப் பின்னர் சென்றார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சிக்கு பின்னர் காங்கிரஸ் கட்சி மாநகர மாவட்ட செயலாளர் ரெக்ஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக்கையும், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜியையும் அழைத்து சமாதானமாக பேசி மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக்கிடம் எம் எல் ஏ நவல்பட்டு விஜி கை கொடுத்தார். அப்போது வேண்டாம் வெறுப்பாக மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் கை கொடுத்துவிட்டு சென்றார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ரெக்ஸ் திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜியை கட்டிப்பிடித்து விட்டு சென்றார்.  இதனைத் தொடர்ந்து அமைச்சர் ரமேஷ் செய்தியாளரிடம் பேசும்போது….எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை புரோட்டோகால் படி நடப்பதில் முன்னே பின்னே நடந்து விட்டது அவ்வளவுதான் வேறு ஒன்றும் இல்லை என்றார்.  மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி எம்பி கிரிஸ்டோபர் திலக்கியிருக்கும் தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ விற்கும் குத்து விளக்கு ஏற்றுவதில் மெழுகுவர்த்தியை கீழே போட்ட பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள் கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர் வழங்கும்பொழுது தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் மணப்பாறை கதிரவனுக்கும் நவல்பட்டு விஜிக்கும் புகைப்படம் எடுப்பதில் வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் தமிழக வெற்றிக்கழக கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.