Trending News Tamil News Website In Trichy

நாளை திருச்சியில் பிரம்மாண்ட மாரத்தான் -டாக்டர் ஜி. விஸ்வநாதன் மருத்துவமனை வழங்கும் ரூ.3 லட்சம் பரிசுத்தொகை

0

திருச்சி 3.10.2026

திருச்சியில் நாளை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டப்போட்டி – ரூபாய் 3 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு

திருச்சியில் டாக்டர் கே. சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை (SBCF) மற்றும் டாக்டர் ஜி. விஸ்வநாதன் மருத்துவமனை இணைந்து நடத்தும் ‘மேம்மோரான் 2026’ மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டப்போட்டி வரும் அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், இந்நோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கவும் இந்த விழிப்புணர்வு போட்டி நடத்தப்படுகிறது. 21.1 கி.மீ. அரை மாரத்தான் போட்டி -மாம்பழச் சாலையில் உள்ள டாக்டர் ஜி. விஸ்வநாதன் மருத்துவமனை வளாகத்தில் இருந்து நாளை மாலை 5 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. ஸ்ரீரங்கம் காவல்துறை துணை ஆணையர் சீதாராமன் கொடியசைத்து இப்போட்டியை துவக்கி வைக்கிறார். 5 கி.மீ. விழிப்புணர்வு ஓட்டப்போட்டி தென்னூர் உழவர் சந்தையிலிருந்து காலை 7 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைக்கிறார். இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு முன்பதிவு இலவசமாக வழங்கப்படுகிறது.இப்போட்டிகளின் பரிசளிப்பு விழா திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெறவுள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் ரூ. 3 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் டாக்டர் காஜா நஜீமுதீன் மற்றும் திரைப்பட நடிகை ஸ்ரீத்தா முகுந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர். பொதுமக்கள் அனைவரும் இப்போட்டியில் பெருமளவில் பங்கேற்று மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை சமுதாயத்தில் கொண்டு சேர்க்க உதவுமாறு அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.