சட்டம்-ஒழுங்கு சீர்கேடு- காவல்துறையின் கண்முன்னே திருச்சி வயலூர் சாலையில் நடுரோட்டில் குடும்பத்தினர் மீது தாக்குதல்
திருச்சி 10.11.2026
திருச்சி வயலூர் சாலையில் இரு தரப்பினர் இடையே மோதல் – 4 பேர்கள் மீது வழக்கு பதிவு..
திருச்சி மாநகர் உறையூர் பாண்டமங்களம் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ்வர் தனது குடும்பத்திருடன் வயலூர் சென்றுக்கொண்டு இருந்தார். அப்போது எந்தவிதமான சிக்னலோ அல்லது இன்டிகேட்டரோ காட்டாமல் திடீரென ஆட்டோ ஓட்டுநர் வாகனத்தை வளைத்துள்ளார். இதனால் ஆட்டோ , கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் இப்படி வாகனத்தை திருப்புவது விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்று ஜெகதீஷ்வர் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநரும் அவருடன் சேர்ந்து வந்த சில நபர் சேர்ந்து ஜெகதீஷ்வர் குடும்பத்தினரை நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு அருகில் இருந்தும் ஜெகதீஷ்வர் குடும்பத்தினர் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் காவல்துறையினர் இரு தரப்பினரையும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். பின்பு ஆட்டோ ஓட்டுநர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் நேரில் ஆஜராக வேண்டும் என அறிவுரை வழங்கி காவல்துறையினர் தங்களது சொந்த ஜாமினில் அவர்களை விடுவித்தனர்.

(( குறிப்பு : இரு தரப்பினர் இடையே மோதல் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது ))
