Trending News Tamil News Website In Trichy

திருச்சியில் அதிர்ச்சி- தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து தொடரும் மிரட்டல்… பெட்ரோல் பங்க் பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு-பங்க் உரிமையாளர் கதறல்

0

திருச்சி 9.11.2026

திருச்சியில் அதிர்ச்சி- தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து தொடரும் மிரட்டல்… பெட்ரோல் பங்க் பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு-பங்கு உரிமையாளர் கதறல்

திருச்சி ஈ.பி. ரோடு பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்க்கில் வரிசை முறையை மீறி வந்து பெட்ரோல் கேட்ட நபர் அங்கு பணிபுரிந்த பெண் ஊழியரைக் கடுமையாகத் திட்டி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் பிற்பகலில் இப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு வந்த கோபால் என்பவர் வழக்கம் போல் வரிசையில் நின்று பெட்ரோல் போடாமல் குறுக்கே வந்து உடனடியாக பெட்ரோல் போடுமாறு தகராாரில் ஈடுபட்டுள்ளார். வரிசைப்படி வருமாறு அறிவுறுத்திய பெண் ஊழியரை அவர் ஒருமையில் திட்டியதுடன், உன்னை உயிரோடு விடமாட்டேன் கழுத்தை அறுத்துப் போட்டுவிடுவேன் எனப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ச்சியாக இதுபோன்ற மிரட்டல்கள் வருவதாலும் இரவு நேரங்களில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாலும் பெண் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலைக்கு வர மறுத்துவிட்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பெட்ரோல் பங்க் இயங்குவதிலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே பலமுறை புகார்கள் அளிக்கப்பட்ட போதிலும் உள்ளூர் அரசியல்வாதிகள் சிலர் தலையிட்டு சமரசம் பேசிவிட்டுக் சென்றுவிடுவதால் சம்பந்தப்பட்ட நபர் தொடர்ந்து இதுபோன்ற அராஜகங்களில் ஈடுபட்டு வருவதாக நிர்வாகத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. மேலும், சமீப காலமாக இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட நிர்வாகத்தினர், காவல்துறையினர் உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுத்து தங்களது உயிருக்கும் தொழிலுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பெட்ரோல் பங்க்கின் முன்பாக பேனர்களை வைத்து ஆளுங்கட்சியினர் மற்றும் உள்ளூர் நபர்கள் அச்சுறுத்துவதாகவும் உரிய பாதுகாப்பு வழங்காவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் ஊழியர்களும் எச்சரித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.