Trending News Tamil News Website In Trichy

திருச்சி விமான நிலையத்தில் அதிரடி- தாய்லாந்தில் இருந்து கொழும்பு வழியாகக் கடத்தப்பட்ட 50 அரிய வகை பாம்புகள் மற்றும் இக்வானாக்கள் பறிமுதல்-2 பயணிகள் கைது

0

திருச்சி 26.10.2026

*திருச்சி விமான நிலையத்தில் அதிரடி- வெளிநாட்டுப் பாம்புகள் மற்றும் இக்வானாக்கள் பறிமுதல் – இரண்டு பயணிகள் கைது*

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் பாங்காக்கிலிருந்து கொழும்பு வழியாகக் கடத்தி வரப்பட்ட பல வகையான வெளிநாட்டுப் பாம்புகள் மற்றும்  (Iguana) ரக  ஊர்வன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பயணியை அதிகாரிகள் இன்று மாலை கைது செய்தனர்.

சமீப காலமாகப் பாங்காக்கிலிருந்து வரும் விமானங்களில் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விமானம் மீது தீவிரக் கண்காணிப்பு செலுத்தி வருகின்றனர். இதைக் கவனத்தில் கொண்டு நேரடி விமான சோதனைகளைத் தவிர்ப்பதற்காகக் கடத்தல்காரர்கள் பாங்காக்கிலிருந்து கொழும்பு வழியாகத் திருச்சிக்குப் பயணம் செய்யும் புதிய தந்திரத்தைப் பயன்படுத்தி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.கைப்பற்றப்பட்ட விலங்குகள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்ட விதிமுறைகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்த மேல் விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.