Trending News Tamil News Website In Trichy

சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் ரத உற்சவம்

0

பிரம்மோற்சவ விழாவில் இன்று, பத்மாவதி தாயார் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சென்னை தி.நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. தினமும் உற்சவ தாயார், வாகனங்களில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அவ்வகையில் இன்று ரத உற்சவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று இரவு அஸ்வ வாகன சேவை நடைபெறுகிறது. நாளை இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.