Trending News Tamil News Website In Trichy

தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சியில்-சாகசப் பிரியர்களுக்காகத் திறக்கப்பட்டது தமிழகத்தின் முதல் மண் கார்டிங் அரங்கம்

0

திருச்சி 15.10.2026

*திருச்சியில் தமிழகத்தின் முதல் மண் கார்ட்டிங் மற்றும் ஆஃப்-ரோடு மோட்டார் ஸ்போர்ட்ஸ் தளம்* *ஆன்லைன் பொழுதுபோக்கில் மூழ்கும் இளைஞர்களை நேரடி சாகச விளையாட்டுகளுக்கு ஈர்க்கும் முயற்சி*

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் அமைந்துள்ள ஃபூரிஸ்ட்ராடா கிரவுண்ட்ஸ் FUORI STRADA GROUNDS சார்பில், இளைஞர்களிடையே மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வத்தை வளர்க்கவும், முறையான ஓட்டுநர் பயிற்சி மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புதிய மண் கார்ட்டிங் மற்றும் ஆஃப்-ரோடு மோட்டார் ஸ்போர்ட்ஸ் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முதல் மண் கார்ட்டிங் தளமாகவும், திருச்சியின் முதல் பந்தயத் தலமாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் தளம், பைக்குகள், மற்றும் ஆஃப்-ரோடு வாகனங்களுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1.1 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த மண் சுற்றுப்பாதையில் 8 இடது பக்க வளைவுகள், 4 வலது பக்க வளைவுகள், நீர்நிலைகளைக் கடக்கும் பகுதிகள், மேடு பள்ளங்கள் நிறைந்த கரடுமுரடான பாதைகள், ஒட்டகத்தின் முதுகைப் போன்ற ஏற்ற இறக்கங்கள் மற்றும் பாறைகள் நிறைந்த சவாலான பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக நேரத்தைச் செலவிட்டு வரும் நிலையில், அவர்களை நேரடியாகப் பங்கேற்கக்கூடிய சாகச மற்றும் திரில்லான விளையாட்டுகளின் பக்கம் ஈர்க்கும் நோக்கிலும் இந்தத் தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மெய்நிகர் விளையாட்டுகளைத் தாண்டி, பாதுகாப்பான சூழலில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் அனுபவத்தைப் பெறவும், புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளவும் இது வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், வாகனங்களை முறையாகக் கையாளுதல், பொறுப்பான ஓட்டுநர் பழக்கங்கள் மற்றும் சாலைப் பாதுகாப்பின் அவசியம் குறித்து

இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.