திருச்சி: காவல் நிலையம் அருகே யூனியன் வங்கியில் கொள்ளை முயற்சி – பல கோடி ரூபாய் தப்பியது
திருச்சி 10.10.2026
திருச்சி: காவல் நிலையம் அருகே யூனியன் வங்கியில் கொள்ளை முயற்சி – பல கோடி ரூபாய் தப்பியது
திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையம் அருகே உள்ள யூனியன் வங்கி கிளையில் நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கண்டோன்மென்ட் காவல் நிலையம் அருகில் உள்ள யூனியன் வங்கி கிளை. வங்கிக் கதவின் மூன்று பூட்டுகளில், ஒரு பூட்டை மட்டும் கொள்ளையர்கள் உடைத்துள்ளனர். மற்ற பூட்டுகளை உடைக்க முடியாததால் அவர்கள் தப்பியோடினர்.
பூட்டு உடைக்க முடியாததால், வங்கியில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பொதுமக்களின் சேமிப்புப் பணம் மற்றும் நகைகள் பாதுகாப்பாகத் தப்பின.
மோப்ப நாய் காவிரி உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அலாரம் வயர் துண்டிக்கப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் நிலையம் அருகிலுள்ள பாதுகாப்பு மிகுந்த பகுதியில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கொள்ளையர்களைக் கண்டோன்மென்ட் போலீசார் தேடி வருகின்றனர்.