Trending News Tamil News Website In Trichy

சமயபுரம் அருகே மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் பட்டப்பகலில் கழுத்தறுத்து கொலை.

0

திருச்சி 14.09.2026

*மதுக்கடைகளில் தொடரும் மரணங்கள்- சமயபுரத்தில் இளைஞர் கழுத்தறுத்துக் கொலை – அரசின் அலட்சியத்திற்கு பொதுமக்கள் கண்டனம்*

சமயபுரம் அருகே அரசு மதுபானக் கடையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தகராறில், இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருதூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரகாஷ் (30). சமயபுரம் நால்ரோடு அரசு மதுபானக் கடையில் மது வாங்கச் சென்றபோது, கூட்ட நெரிசலில் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது.

கும்பலில் இருந்த மர்ம நபர் பிரகாஷின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடினார். ரத்தப்போக்கு காரணமாக பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சமயபுரம் போலீசார் உடலைக் கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தப்பியோடிய நபரைத் தேடி வருகின்றனர்.டாஸ்மாக் கடைகளில் போதிய பாதுகாப்பு மற்றும் வரிசை ஒழுங்குமுறை இல்லாததே இதுபோன்ற தொடர் வன்முறைகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.