Trending News Tamil News Website In Trichy

அல் ஆதம் ஹஜ் சர்வீஸ் சார்பில் 2027 ஹஜ் பயணத்திற்கு 2 புதிய பேக்கேஜ்கள் அறிமுகம்- திருச்சியில் முன்பதிவு தொடக்கம்

0

திருச்சி 12.09.2026

அல் ஆதம் ஹஜ் சர்வீஸ் சார்பில்-ஹஜ் பயணம் செல்ல 2 வித பேக்கேஜ்கள் அறிமுகம்

டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு

அல் ஆதம் ஹஜ் சர்வீஸ் 2027 ஆம் ஆண்டுக்கான முன்பதிவு குறித்து திருச்சியில் அல் ஆதாம் ஹஜ் சர்வீஸ் குழும தலைவரும், தமிழக ஹஜ் ஏற்பாட்டாளர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவருமான லேனா இஷாக் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது ..

இந்திய அரசின் அனுமதியோடு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் நபர்களில் டெல்டா மாவட்ட பட்டியல் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடந்தது.வருகின்ற 2027 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் இந்தியா முழுவதும் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் பயணம் மேற்கொள்ள உள்ளனர். தமிழகத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதில் எங்களுடைய ஹஜ் சர்வீஸ் நிறுவனத்தின் சார்பில் டெல்டா மாவட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட ஹாஜிகளை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம். கடந்த 25 ஆண்டு காலமாக ஹஜ் சேவை செய்து வரும் அல் ஆதம் நிறுவனம் ஹஜ் பயணிகளை அழைத்துச் செல்ல இரண்டு விதமான பேக்கேஜ்களை அறிமுகம் செய்து உள்ளது. 6 லட்சத்து 60 ஆயிரம் பேக்கேஜ். மற்றொன்று 8 லட்சம் ஆகும்.

 ஹஜ் பயணம் மேற்கொள்வர்கள் புல் பேக்கேஜில் 35 நாட்களும், ஷார்ட் பேக்கேஜில் 20 நாட்களிலும் கார்ப்பரேட் பேக்கேஜில் 14 நாட்களும் ஹஜ் பயணம் மேற்கொள்ள எல்லா வித ஏற்பாடுகளும் செய்து உள்ளோம். மேலும் அங்கு தங்குவதற்கு அனைத்து விதமான வசதிகளும், உணவுகளும் தரமாக ஏற்பாடு செய்து உள்ளோம். இந்த முறை திருச்சி விமான நிலையத்தில் இருந்து 100 ஹாஜிகளை ஹஜ்க்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்து வருகிறோம்.

எங்களுடைய நிறுவனத்தின் டெல்டா மாவட்ட பொறுப்பாளராக திருச்சியில் 45 ஆண்டுகளாக ஹஜ் பயண சேவை சிறப்பாக மேற்கொண்டு வரும் ஹாஜி எம் எஸ். பசல்க்கு வழங்கி உள்ளோம். எனவே ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் திருச்சி தென்னூர் பள்ளிவாசல் எதிரில் உள்ள இந்த நிறுவனத்தை அணுகி பயன் பெற்று கொள்ளலாம்.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹஜ் பயணம் மேற்கொள்வதில் இருந்த சில பிரச்சனைகள் தற்பொழுது சரி செய்யப்பட்டு விட்டது.

சென்னையில் ஹஜ் இல்லம் கட்டி வரும் தமிழக அரசு தனியார் ஹஜ் கமிட்டி ஏற்பாட்டாளர்களையும் இந்த இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்புகளில் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு ரூபாய் 35 ஆயிரம் மானியம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி மற்றும் டிடிஎஸ் வரியை விதிக்கிறார்கள். இதனை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கும், நிதி அமைச்சருக்கும் வலியுறுத்த வேண்டும்.

வருகிற அக்டோபர் 10 ந் தேதிக்குள் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் திருச்சி தென்னூர் பள்ளிவாசல் எதிரில் உள்ள முதல் மாடி நம்பர் 9 முகவரியிலும், 74015 83786, 98430 32113 ஆகிய செல் நம்பர்களில் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறினார்.

இந்த பேட்டியின் போது ஆதம் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் ஏ எம் பாதுஷா, சிஇஓ அல் ஆதம் குடும்ப சிஇஒ ஹாஜி பசல், முகமது சிகான், செல்வ நகர் ஜமாத் தலைவர் ஹாசிம், இமாம் அகமது ஜெய்னி , முஸ்லீம் லீக் அமீர், ஹாசிக், இப்ராஹிம் வழக்கறிஞர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.