நாளை திருச்சி TVS டோல்கேட்டில் பிரம்மாண்ட திறப்பு விழா – ‘தி சென்னை சில்க்ஸ்’ & ‘ஸ்ரீ குமரன் தங்கமாளிகை’ – துணிகளுக்கு 10% & சவரனுக்கு ரூ.5,000 சிறப்பு தள்ளுபடி
திருச்சி 12.09.2026
3¼ லட்சம் சதுர அடியில் மெகா பிரம்மாண்டம்! ஸ்விம்மிங் பூலுடன் 5-ஸ்டார் ஹோட்டல் ஜனவரியில் திறப்பு… திருச்சி TVS டோல்கேட்டில் நாளை லான்ச் ஆகிறது ‘தி சென்னை சில்க்ஸ்’ & ‘ஸ்ரீ குமரன் தங்கமாளிகை’ – 3 நாட்களுக்கு சவரனுக்கு ₹5,000 & துணிகளுக்கு 10% அதிரடி தள்ளுபடி
டெல்டா மாவட்ட மக்களுக்கு ஒரே இடத்தில் சர்வதேச அளவிலான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில், திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் 3¼ லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாகியுள்ள புதிய ஒருங்கிணைந்த வணிக வளாகம் நாளை வெகுவிமர்சையாகத் திறக்கப்படுகிறது.
இவ்வளாகத்தில் ‘தி சென்னை சில்க்ஸ்’ நிறுவனத்தின் 27-வது கிளையையும் (திருச்சியில் 2-வது கிளை), ‘ஸ்ரீ குமரன் தங்கமாளிகை’யின் 53-வது கிளையையும் ஒரே இடத்தில் தங்களது சேவையைத் தொடங்கவுள்ளன.
சென்னை சில்க்ஸ் ஆடைகளுக்காக மட்டும் 1.5 லட்சம் சதுர அடி பரப்பளவை ஒதுக்கியுள்ளது. இதில் நேரடியாக நெசவாளர்களிடம் இருந்து பெறப்பட்ட 50,000-க்கும் மேற்பட்ட பிரத்யேக பட்டுப்புடவைகள், இதுவரை சந்தைக்கு வராத புதிய டிசைன்கள், 30-க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டட் ஷர்ட்டுகள், காட்டன், மைசூர் சில்க், சிந்தடிக் புடவைகள் மற்றும் பிராண்டட் சுடிதார் கலெக்ஷன்கள் இடம்பெற்றுள்ளன.
ஸ்ரீ குமரன் தங்க மாளிகை 2 தளங்களில், 50,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சொந்தத் தயாரிப்பில் உருவான தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகளின் புத்தம் புதிய கலெக்ஷன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
திருமணத்திற்கு ஒரே இடத்தில் நகைகளும் ஆடைகளும் எடுக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக ‘பட்டும் பவுனும்’ என்ற பிரத்யேக VIP லவுஞ்ச் வசதி செய்யப்பட்டுள்ளது.
சுவையான உணவுகளுக்குப் புகழ்பெற்ற ‘சங்கீதாஸ்’ உணவகம் இங்கு செயல்படவுள்ளது. மேலும், விமான நிலையத்திற்கு அருகில் அமைந்திருப்பதால், NRI மற்றும் வெளியூர் வாடிக்கையாளர்களின் வசதிக்காக கட்டிடத்தின் மேல் தளங்களில் ITC தரத்திலான 5-Star Category 105 அறைகள் மற்றும் 3 நவீன கூட்ட அரங்குகளுடன் கூடிய ஹோட்டல் வரும் ஜனவரி மாதம் திறக்கப்படவுள்ளது.
நகரப் போக்குவரத்து நெரிசல் இன்றி மக்கள் வந்து செல்ல ஏதுவாக அமைக்கப்பட்ட இந்த வளாகத்தில், 2 தளங்களில் அண்டர்கிரவுண்ட் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 500 கார்கள் மற்றும் 1,000 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும். மின்சார வாகனங்களுக்காக (EV) சார்ஜிங் பாயிண்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
திறப்பு விழாவை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
துணிமணிகளுக்கு 10% தள்ளுபடி தங்க நகைகளுக்கு சவரனுக்கு ரூபாய் 5,000 தள்ளுபடி
திருச்சி மட்டுமின்றி கரூர், தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட மொத்த டெல்டா மாவட்ட மக்களும் எளிதாக வந்து செல்லும் வகையில் இந்த ஷாப்பிங் வளாகம், திருச்சியின் புதிய அடையாளமாக உருவெடுத்துள்ளது.
இந்த நிகழ்வில் தி சென்னை சில்க்ஸ் இயக்குனர் என்.கே நந்தகோபால் மற்றும் தி சென்னை சில்க் நிறுவனத்தின் பொது மேலாளர் திரு.டி ஆனந்த் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.