Trending News Tamil News Website In Trichy

ஸ்ரீரங்கம் தொகுதி: மணிகண்டம் தெற்கு ஒன்றிய கிராமங்களில் அதிமுக வேட்பாளர் மனோகரன் சூறாவளிப் பிரச்சாரம்*

0

திருச்சி

**ஸ்ரீரங்கம் தொகுதி: மணிகண்டம் தெற்கு ஒன்றிய கிராமங்களில் அதிமுக வேட்பாளர் மனோகரன் சூறாவளிப் பிரச்சாரம்*

ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் மனோகரன் அவர்கள், மணிகண்டம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மணிகண்டம் தெற்கு ஒன்றியத்தின் முக்கியப் பகுதிகளான கருமாரி அம்மன் நகர், செங்குறிச்சி, மேற்குடி, முடிகண்டம், கோலார்பட்டி, நடுப்பட்டி, ஆலம்பட்டி, கவுத்த நாயக்கன்பட்டி, செட்டியூர்ப்பட்டி, யாகப் உடையான்பட்டி மற்றும் பள்ளப்பட்டி ஆகிய இடங்களில் வேட்பாளர் மனோகரன் அவர்கள் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.பொதுமக்கள் தங்கள் இல்லங்களின் முன்பு வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும், பொன்னாடை போர்த்தியும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள் மத்தியில், கழகத்தின் சாதனைகளை விளக்கி அவர் ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு ஆதரவு கோரினார்.

இந்தத் தீவிர வாக்கு சேகரிப்பு நிகழ்வில் மணிகண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துக்கருப்பன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் பெரியசாமி,மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவு செயலாளர் அற்புதராஜ்,மாவட்ட மீனவர் அணி செயலாளர் கண்ணதாசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

தொகுதி வளர்ச்சிக்காகவும், மக்கள் நலத்திட்டங்கள் தங்குதடையின்றி கிடைக்கவும் இரட்டை இலை சின்னத்திற்குப் பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றி பெறச் செய்யுமாறு நிர்வாகிகள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.