**மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவனுக்கு ஆதரவாக முத்தரசன் அனல் பறக்கும் பிரச்சாரம்!*🔥
திருச்சி
மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவனுக்கு ஆதரவாக முத்தரசன் அனல் பறக்கும் பிரச்சாரம்🔥
மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் கதிரவனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் முத்தரசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தின் போது பேசிய முத்தரசன், “மத்திய பாஜக அரசு தமிழகத்தைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு வைக்கும் பாரபட்சமான போக்கை அவர்கள் கடைபிடிக்கிறார்கள்” என கடுமையாக விமர்சித்தார்.டெல்லியில் நடப்பது ஒரு மன்னராட்சி போன்றது என்றும், தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் செயலை முறியடிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களுக்காகப் பெயர் போலவே ஒளிரும் கதிரவனாகப் பணியாற்றும் கதிரவனுக்கு ‘உதயசூரியன்’ சின்னத்தில் வாக்களித்து அவரைப் பெருவெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று முத்தரசன் கேட்டுக்கொண்டார்.
கடந்த கால திமுக ஆட்சியின் சாதனைகளையும், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட விபரங்களையும் சுட்டிக்காட்டிய அவர், தொகுதியின் வளர்ச்சிக்காக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கதிரவனை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்