திருச்சி கிழக்கில் தளபதியின் தேர்தல் முழக்கம்- வீடு வீடாகச் சென்று வாக்குறுதிகளைச் சேர்த்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்
திருச்சி 4.04.2026
*திருச்சி கிழக்கில் தளபதியின் தேர்தல் முழக்கம்- வீடு வீடாகச் சென்று வாக்குறுதிகளைச் சேர்த்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்*

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்கள், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

திருச்சி மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் அவர்களின் ஆலோசனையின் பேரில், இன்று திருச்சி கிழக்குத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிரடியான தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. மலைக்கோட்டை மாநகர் பகுதி இணை செயலாளர் ராக்போர்ட் ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நிர்வாகிகள் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினர்.

திருச்சி கிழக்கு மாவட்ட உறுப்பினர் சேர்க்கை அணி பொருளாளர் ச.சபரீஸ் மற்றும் அணி நிர்வாகிகள் ப.ஹரிஹரன், ச. சுதீஷ்பாண்டி, ச. யோகேஸ்வரன், நா. அஜிஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கட்சியின் “சிறப்பு தேர்தல் உத்தரவாதங்களை” துண்டுப் பிரசுரங்களாக வழங்கினர்.
முக்கிய வாக்குறுதிகளாக
மகளிருக்கு மாதம் ரூபாய் 2500 உரிமைத் தொகை,ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள்.
மாணவர்களுக்கு 20 லட்சம் வரை பிணையில்லா கல்வி கடன்.பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்.
பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம். ஆகிய வாக்குறுதிகளை ஒவ்வொரு வீட்டிலும் எங்களது தலைவரின் திட்டங்கள் இன்று சென்றடைந்துள்ளன, என நிர்வாகிகள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
இந்த அதிரடிப் பிரச்சாரத்தால் திருச்சி கிழக்குத் தொகுதி மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
திருச்சி கிழக்குத் தொகுதியை முன்மாதிரித் தொகுதியாக மாற்றுவதே எங்கள் நோக்கம் என தெரிவித்தனர்.