மாணவிகளை இழிவுபடுத்தும் கல்லூரி முதல்வர்? திருச்சியில் வெடித்த மாணவர் போராட்டம்
திருச்சி 6.02.2026

மாணவிகளை இழிவுபடுத்தும் கல்லூரி முதல்வர்? திருச்சியில் வெடித்த மாணவர் போராட்டம்
திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரி முதல்வர் சத்தியா அவர்கள், மாணவிகளின் ஆடை மற்றும் தனிப்பட்ட ஒழுக்கம் குறித்துத் தொடர்ந்து இழிவாகவும், கொச்சையாகவும் பேசி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பில் கல்லூரி வளாகத்திற்குள் பிரம்மாண்ட உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
கல்லூரிக்கு வரும் மாணவிகளை நுழைவாயில் முன் நிற்க வைத்து முதல்வர் பல்வேறு கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்:
அம்பர்லா டாப் மட்டுமே அணிய வேண்டும்.”
* “உன் ஆடை சரியாக இல்லை; நீ கல்லூரிக்கு வந்திருக்கிறாயா அல்லது ஷாப்பிங் வந்திருக்கிறாயா?”
* “யாருடன் போயிட்டு வருகிறாய்?” என்பது போன்ற தனிப்பட்ட தாக்குதல்கள்.
மாணவிகளின் பாதுகாப்பைக் காரணம் காட்டி, அவர்களை உளவியல் ரீதியாகத் துன்புறுத்தும் வகையில் முதல்வர் செயல்படுவதாக மாணவர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.

எனவே துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு SFI கிளைத் தலைவர் பிரதீப் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் வைரவளவன், மாவட்டச் செயலாளர் ஆமோஸ், கிளைச் செயலாளர் துளசிராமன் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.
கல்லூரி நிர்வாகம் மற்றும் உயர்கல்வித் துறை இதற்கு முறையான விளக்கம் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.