மனுதர்மத்தை தீயிட்டு கொளுத்தி போராட்டம்! திருச்சியில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக மகளிர் காங்கிரஸ் போராட்டம்
திருச்சி 3.09.2026
மனுதர்மத்தை தீயிட்டு கொளுத்தி போராட்டம்- திருச்சியில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக மகளிர் காங்கிரஸ் போராட்டம்
உத்தரப் பிரதேச மாநிலம் ஹல்த்வானியில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த மாதம் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தை, அவர் தலித் தலைவர் என்பதால் தீட்டுப்பட்டுவிட்டதாகக் கூறி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர் கங்கை நீரால் தெளித்து சுத்தம் செய்துள்ளனர்.
சாதிய அடக்குமுறையையும் தலித் மக்களுக்கு எதிரான இந்த அவமதிப்பையும் கண்டித்து குரல் கொடுத்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது, கோட்வாலி காவல் நிலையத்தில் பாஜகவினர் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சாதிய வன்முறையைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் ராகுல் காந்தி மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றம் முன்பு மகளிர் காங்கிரஸ் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மனுதர்ம சாஸ்திரத்தை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாநில செயலாளர் அபிநயா திருச்சி மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் சித்ரா இணைச் செயலாளர் தமிழரசி மற்றும் மகிளா காங்கிரஸ் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கங்கா நாகேஸ்வரி அகிலா அம்மு சபிதா நிர்மலா பரமேஸ்வரி பழனியம்மாள் ஈஸ்வரி முத்துலட்சுமி ஜூலி சம்பூர்ணம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.