Trending News Tamil News Website In Trichy

தமிழக அரசுக்கு எச்சரிக்கை- கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பிரம்மாண்ட போராட்டம்- திருச்சியில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு

0

திருச்சி 20.09.2026

 *தமிழக அரசுக்கு எச்சரிக்கை- கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பிரம்மாண்ட போராட்டம்- திருச்சியில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு*

தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் மாயகிருஷ்ணன் தலைமையில் திருச்சி மாநகராட்சி அருகே உள்ள ஆசிரியர் இல்லத்தில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தை தொடர்ந்து மாநிலத் தலைவர் மாயகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்..

மாற்றுத்திறனாளி ஊழியர்களின் வாழ்வாதாரச் சிக்கல்கள் குறித்து அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியும் இதுவரை எந்தப் பேச்சுவார்த்தைக்கும் அழைக்காதது வேதனை அளிக்கிறது. பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட 4% இடஒதுக்கீட்டில் உள்ள முரண்பாடுகளை அரசு உடனடியாகக் களைய வேண்டும். தற்காலிகமாகப் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல் அரசு அலட்சியம் காட்டி வருகிறது. சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பு காலியாக உள்ள இடங்களில் உடனடி இடமாறுதல் மற்றும் உயர்த்தப்பட்ட போக்குவரத்துப் படியாக ரூபாய் 5,000 வழங்க வேண்டும்.

அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தடையற்ற அணுகல் வசதி சாய்வுதளம் மற்றும் சக்கர நாற்காலி வசதிகள் கூடச் சரிவரச் செய்து தரப்படவில்லை.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதோடு, முழுமையான வருமான வரி விலக்கு, வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி மற்றும் சாலை வரி விலக்கு அளிக்க வேண்டும்.மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து உடனடி விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

ஏற்கனவே மூன்று முறை கடிதம் அனுப்பியும் முதலமைச்சர் தரப்பிலிருந்து சந்திப்பிற்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை. எனவே தங்களது நியாயமான மற்றும் சட்டப்படியான கோரிக்கைகளை நேரில் கேட்டு தீர்வு காணும் வகையில் சங்கப் பிரதிநிதிகளை உடனடியாகச் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என முதலமைச்சருக்கு வலியுறுத்தினார்.

தமிழக அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டினால், சத்துணவுப் பணியாளர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் உட்பட அனைத்துப் பிரிவு மாற்றுத்திறனாளி ஊழியர்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.