திருச்சியில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி SRMU ரயில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி 22.10.2026
எஸ் ஆர் எம் யு ரெயில் டிரைவர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஆர்ப்பாட்டத்திற்கு எல் ஆர் எஸ் கோட்ட செயலாளர் சுதாகர் தலைமை தாங்கினார். எஸ்ஆர்எம்யூ துணை பொதுச்செயலாளரும் மற்றும் திருச்சி பொன்மலை பொறுப்பாளர் வீரசேகரன் கண்டன உரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் திருச்சி கோட்ட செயலாளர் கோவிந்தராஜன் மற்றும் ஓட்ட தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கூட்டத் தலைவர் மயில்வாகனன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் நிரப்பப்படாமல் உள்ள 150 க்கும் மேற்பட்ட லோகோ பைலட் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.டி எம் ஆர் இல்லாமல் சரக்கு ரயில்களை இயக்க அனுமதிக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும் சரக்கு ரயில் ஓடும் தொழிலாளர்களை 9 மணி நேரத்திற்கும் மேலாக பணிபுரிய கட்டாயப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.