Trending News Tamil News Website In Trichy

திமுகவை வீழ்த்துவோம் என கூறுபவர்கள் எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்து வேண்டுமானாலும் களத்திற்கு வரட்டும் அவர்களை திமுக எதிர்கொள்ளும் – திருச்சியில் அமைச்சர் கே என் நேரு பேச்சு

0

திமுகவை வீழ்த்துவோம் என கூறுபவர்கள் எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்து வேண்டுமானாலும் களத்திற்கு வரட்டும் அவர்களை திமுக எதிர்கொள்ளும் – திருச்சியில் அமைச்சர் கே என் நேரு பேச்சு

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 72வது பிறந்தநாள் விழா பொதுகூட்டம் கருமண்டபம் பகுதி செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது…

இந்த கூட்டத்தில் கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என்.நேரு கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார்..


.
இந்தக்கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர மேயர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, கழக கொள்கை பரப்பு துனணச்செயலாளர் கரூர் முரளி, தலைமை கழக பேச்சாளர் தர்மபுரி அதியமான், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே என் நேரு
முதலமைச்சர் மு க ஸ்டாலினை முதலமைச்சராக முடியாது என எதிர்க்கட்சிகள் கூறிக் கொண்டிருந்தார்கள் அதையும் மீறி மக்களின் ஆதரவோடு முதலமைச்சராகி நான்காண்டை நிறைவு செய்துள்ளார். இந்த நான்கு ஆண்டிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டத்தை மக்களுக்கு செயல்படுத்தி உள்ளார் நம்முடைய முதலமைச்சர்.

மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று இருக்கக்கூடிய நிலையில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி நெருக்கடியை உண்டாக்கியுள்ளார்கள். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள்.

ஒன்றிய அரசு நிதியை தர மறுத்தபொழுதும் மக்களுக்காக எந்த திட்டத்தையும் நிறுத்தாமல் அதனை நம்முடைய முதலமைச்சர் செயல் படுத்தி வருகிறார்.

திமுகவை அழித்து விட வேண்டும் என பல்வேறு சிரமங்களை ஒன்றிய அரசு தந்து கொண்டுள்ளது.

தொகுதி மறு வரை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். அதில் நான்கு கட்சிகளைத் தவிர மீதமுள்ள அனைத்து கட்சிகளும் கலந்துகொண்டு தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஒரு மனதாக ஏற்றுக் கொண்டார்கள். கலைஞர் காலத்தில் கூட அனைத்து கட்சிகளையும் அரவணைத்து இவ்வாறு செய்ததில்லை தற்போதைய முதலமைச்சர் அதை செய்துள்ளார்.

எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என கூறி அனைவரையும் முதலமைச்சர் அரவனைத்துள்ளார்.
நேற்று நடத்திய கூட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் இன்று திமுகவினர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அனைத்து கட்சிகளைளையும் தங்களுக்கு எதிராக ஒன்றுணைத்து விட்டார்கள் என்கிற ஆதங்கத்தின் காரணமாகவே திமுகவினர் வீடுகளில் சோதனை நடந்துள்ளது

சீமான் பேசிய பேச்சின் காரணமாக அவர் இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளாதது அவர் பாஜகவின் பக்கம் தான் இருக்கிறார் என்பதை நிரூபித்துள்ளது.

திமுக தொடர் வெற்றிகளை பெற்று வருவதால் பாஜகவினர் திமுகவை வீழ்த்த வேண்டும் என ஒவ்வொருவராக உசுப்பேத்தி விடுகிறார்கள். சிலரை புதிதாக கட்சி தொடங்க வைத்துள்ளார்கள். கட்சி தொடங்கியவர்கள் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்.

முதலமைச்சராக வேண்டுமென்றால் மக்களுக்காக போராடியிருக்க வேண்டும், மக்களுக்காக தியாகம் செய்திருக்க வேண்டும், மக்களுக்காக சிறை சென்றிருக்க வேண்டும் இப்படி எதையும் செய்யாமல் கட்சி தொடங்கிய உடனே நான் முதலமைச்சர் என்கிறார் ஒருவர்.

மக்களுக்காக உழைத்து மக்களுக்காக போராடி மக்களுக்காக சிறை சென்று முதலமைச்சரானவர் ஒருபுறம் மற்றொருபுறம் நேற்று வரை சினிமாவில் நடித்துவிட்டு இன்று கட்சி தொடங்கி முதலமைச்சராகிறேன் எனக் கூறுபவர் ஒருபுறம், மற்றொருபுறம் இந்தியாவிலேயே வெற்றி பெற்றாலும் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியவில்லை என்கிற நிலையில் இருக்கும் பாஜக.

இப்படி யார் இருந்தாலும் சமூக நீதிக்காக, மொழிக்காக, மாநில உரிமைக்காக தைரியமாக கொள்கை உறுதியோடு ஆட்சி செய்து வருகிறார் முதலமைச்சர்.

பெரியார் அண்ணா கலைஞர் ஆகிய மூவரின் ஒட்டுமொத்த உருவமாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இருந்து வருகிறார்.

அரசை மட்டுமல்ல திமுகவையும் மிகவும் கட்டுக்கோப்பாக வழி நடத்தி வருகிறார் முதலமைச்சர்.

மிகப்பெரிய கூட்டணி அமைத்து 2026 இல் வெற்றி பெற்று விடுவோம் என அதிமுகவினர் கூறுகிறார்கள் ஆனால் திமுக தான் வெற்றி பெறும்.
தமிழக அரசு செய்த சாதனைகளுக்கு மக்கள் மீண்டும் திமுகவை தான் ஆட்சியில் அமர வைப்பார்கள்.

ஒவ்வொரு திமுக தொண்டரும் உழைத்து மீண்டும் மு.க ஸ்டாலினை முதலமைச்சராகுவார்கள்.

எத்தனை தலைவர்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் ஒரே தலைவர் மு க ஸ்டாலினை தான்.

ஒருமுறை புழல் ஏரி உடைந்தது அந்த நேரத்தில் எந்த அதிகாரிகளும் வரவில்லை அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு அது குறித்து தகவல் வந்தவுடன் உடனடியாக களத்திற்கு சென்றார். அவர் வழியிலேயே தான் தற்போதைய முதலமைச்சரும் நேரம் காலம் பார்க்காமல் தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்து வருகிறார்.

திமுகவை தோல்வி அடைய செய்வோம் என பலர் பேசுகிறார்கள் யாராக இருந்தாலும் களத்திற்கு வர வேண்டும் எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்து வந்தாலும் அதனை திமுக எதிர்கொள்ளும்.

கலைஞருக்கு உறுதுணையாக ஸ்டாலின் எப்படி இருந்தாரோ அதுபோல தற்போது ஸ்டாலினுக்கு உறுதுணையாக உதயநிதி ஸ்டாலின் களப்பணியாற்றி வருகிறார்.

எந்தெந்த துறைகளில் வேலை வாய்ப்பு இருக்கிறதோ அதனை நிரப்ப வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி மூலமாக கடந்த 4 ஆண்டு காலத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

திருச்சி மாவட்டத்தில் டைடல் பார்க் வரவுள்ளது அதில் 5000 பேருக்கு வேலை கிடைக்கும்.

திருச்சி மாவட்டத்தில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது நலத்திட்ட உதவிகள் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு திருச்சி மாவட்டத்தில் மட்டும் முதலமைச்சரும் துணை முதலமைச்சர் வழங்கி உள்ளார்கள்.

நகர்ப்புற பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு எளிதாக பட்டா கிடைக்க புதிய அரசாணை முதலமைச்சர் வெளியிட உள்ளார்கள் அதன் மூலம் நகர்புறத்தில் வசிக்கும் மக்கள் எளிதாக பட்டாவை பெற்றுக் கொள்ள முடியும்.

ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தமிழ்நாடு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். உலகில் எங்கு சென்றாலும் பெரிய நிறுவனங்களின் உயர் பதவியில் தமிழர்கள் தான் இருக்கிறார்கள் காரணம் தமிழர்கள் ஆங்கிலத்தை நன்றாக கற்றுக் கொண்டு அவர்கள் உலகம் முழுவதும் வேலை பார்க்கிறார்கள் ஆந்திராவில் இருப்பவர்களும் ஆங்கிலம் கற்றுக் கொண்டு உலகம் முழுவதும் செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

இதுதான் இரு மொழிக் கொள்கையின் சிறப்பு.

இந்தி படித்தவர்கள் அவர்கள் மாநிலத்தில் வேலை இல்லாமல் தான் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வருகிறார்கள்.

தமிழர்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டு பொறியியல் படித்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள் ஆனால் இந்தி தெரிந்த வடமாநிலத்தவர் கட்டிட வேலை செய்ய தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள் இன்று அனைத்து அடிமட்ட வேலைகளுக்கும் வட மாநிலத்தவர் வருகிறார்கள்.

ஒன்றிய அரசை தைரியமாக எதிர்த்து பேசக்கூடிய முதலமைச்சராக நம்முடைய முதலமைச்சர் இருக்கிறார்.

ஒரு விவகாரத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னெடுத்தால் அனைவரும் ஒன்று சேர்வார்கள் என பல்வேறு கட்சியினர் கூறுகிறார்கள்.

மீண்டும் திமுக ஆட்சி அமைக்க முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் துடிப்போடு அவர் இருப்பதால்தான் நடந்து முடிந்த அனைத்து தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது வரும் தேர்தலிலும் வெற்றி பெறும் என பேசினார்

Leave A Reply

Your email address will not be published.