Trending News Tamil News Website In Trichy

திருச்சி: வாய்க்காலில் இறங்கி சடலத்தை தூக்கிச் செல்லும் அவல நிலை – பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

0

திருச்சி 13.11.2026

திருவெறும்பூர் அருகே உள்ள கோட்டாரபட்டியில் உள்ள தட்டான்குள வாய்க்காலில் பாலம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை வாய்க்காலில் இறங்கி சடலத்தை தூக்கி செல்லும் அவல நிலை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாள பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டார பட்டியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி பொது மக்கள் அருகில் உள்ள கிராமத்திற்கும், விவசாய நிலத்திற்கும், இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்வதற்கும் தட்டான் குளம் வாய்க்காலை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் தட்டான் குளம் வாய்க்காலில் பாலம் கட்டித் தருமாறு பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மழைக்காலங்கள் மற்றும் வாய்க்காலில் அதிகப்படியான தண்ணீர் செல்லும் போது பொதுமக்கள் தட்டன்குளம் வாய்க்காலில் இறங்கி கடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இன்று அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் இறந்த நிலையில் அவரது சடலத்தை சேரும் சகதியுடன் இருந்த தட்டான் குளவாய்க்காலில் இறங்கி தூக்கி சென்றனர். இதே அவலநிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருவதால் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் திருவரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை மேற்கொண்டு தட்டான் குளம் வாய்க்காலை கடந்து செல்ல ஏதுவாக பாலம் அமைத்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.