Trending News Tamil News Website In Trichy

மனு அளிக்க வந்தவர் தாக்கப்பட்ட விவகாரம்- துணை சபாநாயகர் மீது நடவடிக்கை கோரி துறையூரில் திமுக போராட்டம்

0

திருச்சி : 11-11-2026*திருச்சி துறையூர் பகுதியில் துணை சபாநாயகர் ரவிசங்கரை கண்டித்து திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..*

திருச்சி மாவட்டம் துறையூரில், துணை சபாநாயகர் ரவிசங்கரை கண்டித்தும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திமுக சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி அருகே துறையூர் பகுதியில் நடைபெற்றது. துறையூர் பேருந்து நிலையம் அருகே நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், மனு அளிக்க வந்த நபர் தாக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திமுகவினரின் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின் குமார், திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தர்மன் ராஜேந்திரன் உள்ளிட்ட திமுகவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமிழக வெற்றி கழக அரசுக்கு எதிராகவும் துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்…

Leave A Reply

Your email address will not be published.