Trending News Tamil News Website In Trichy

திருச்சி சமயபுரம் அருகே இரட்டைக் கொலை- கொலையாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்

0

திருச்சி 9.11.2026

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள இனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த விஷால் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் நேற்று நள்ளிரவு புள்ளம்பாடி வாய்க்கால் கரையில் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த இரட்டைக் கொலையைக் கண்டித்தும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் உயிரிழந்த சிறுவர்களின் உறவினர்கள் மற்றும் இனாம் சமயபுரம் பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோ சமயபுரம் சுங்கச்சாவடி அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், விஷால் மற்றும் ராகுல் ஆகிய இருவரின் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், கொலையாளிகளை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும் அதுவரை இறந்தவர்களின் உடல்களை வாங்க மாட்டோம் எனக் கூறி பாதிக்கப்பட்ட உறவினர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த கொலை தொடர்பாக மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம் எனவும் போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு சாலை ஓரத்தில் நின்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.