Trending News Tamil News Website In Trichy

திருச்சியில் சோகம்- பட்டாசு வெடித்த தகராறில் ஐடி ஊழியர் ஸ்பேனரால் குத்திக் கொலை- 3 பேர் மீது வழக்குப்பதிவு

0

திருச்சி 9.11.2026

*சமயபுரம் அருகே பட்டாசு வெடித்த தகராறில் ஐடி ஊழியர் ஸ்பேனரால் குத்திக் கொலை- 3 பேர் மீது வழக்குப்பதிவு*

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தகராறில் தனியார் ஐடி நிறுவன ஊழியர் ஸ்பேனரால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கிறிஸ்டோபர் (20), தீபாவளி விடுமுறைக்காகச் சொந்த ஊரான புறத்தாக்குடிக்கு வந்திருந்தார். நேற்று மாலை தனது நண்பர்களுடன் அவர் நடுத்தெருவில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மேலத் தெருவைச் சேர்ந்த டொனால்ட், எடிசன் மற்றும் சார்லஸ் ஆகியோர் தங்கள் மீது பட்டாசு விழுவதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த டொனால்ட் அங்கிருந்த இரும்பு ஸ்பேனரை எடுத்து கிறிஸ்டோபரின் நெஞ்சிலும், அவரது நண்பர் ரஞ்சித்தின் முகத்திலும் சரமாரியாகக் குத்தியுள்ளார். படுகாயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, கிறிஸ்டோபர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரஞ்சித் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்துச் சமயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள டொனால்ட் உள்ளிட்ட மூன்று பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.