Trending News Tamil News Website In Trichy

தீபாவளி விபத்துகளைத் தவிர்க்க விழிப்புணர்வு- 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வாசன் கண் மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை

0

திருச்சி 4.11.2026

திருச்சி வாசன் கண் மருத்துவமனை சார்பில் பாதுகாப்பான தீபாவளியை குழந்தைகள் எப்படி கொண்டாடுவது? என்கிற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி வாசன் கண் மருத்துவமனை சார்பில் பாதுகாப்பான தீபாவளியை குழந்தைகள் எவ்வாறு கொண்டாட வேண்டும் என்கிற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

வாசன் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர்

மனோரமா பாயக்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது என்ன மாதிரியான விஷயங்களை கையாள வேண்டும், பொதுவாக பட்டாசு வெடிக்கும் போது விபத்துக்கள் ஏற்பட காரணம் என்ன? பாதுகாப்பான தீபாவளியை குழந்தைகள் கொண்டாடுவதில் பெற்றோர்களின் பங்கு என்ன என்கிற பல்வேறு தலைப்புகளில் பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை மருத்துவ இயக்குனர் மனோரமா பாயக்தி குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் எடுத்துரைத்தார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வாசன் கண் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் மனோரமா பாயக்தி: பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது தொடர்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினோம். குறிப்பாக கண்ணாடி அணிந்து கொண்டு பட்டாசு வெடிப்பது மிகவும் பாதுகாப்பானது என எடுத்துரைத்து இலவசமாக கண்ணாடிகளை வழங்கி உள்ளோம்.

பெற்றோர்கள் அருகில் இல்லாமல் குழந்தைகள் வெடி வெடிப்பதை தவிர்க்க வேண்டும், அதே போல் வெடி வெடித்து விட்டு முகம் அல்லது கண்களில் கைகளை வைக்கக்கூடாது, ஏனென்றால் வெளியில் இருக்கும் கெமிக்கல் மிகப்பெரிய அளவில் கண்களை பாதிக்கக்கூடிய தன்மை உடையது. வாசன் கண் மருத்துவமனையில் 15 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கண்களில் வெடி விபத்தால் காயம் ஏற்பட்டால் அதனை சரி செய்ய இலவச அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகிறோம்.

Leave A Reply

Your email address will not be published.