பாரதி நகர் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலைக் கடை திறப்பு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்
திருச்சி 14.10.2026
*திருச்சி மேற்கு தொகுதி பாரதி நகரில் புதிய நியாய விலைக் கடை திறப்பு- முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்*
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 29-வது வார்டு, பாரதி நகர் பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையை திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாமன்ற உறுப்பினர் கமால் முஸ்தபா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.