Trending News Tamil News Website In Trichy

அன்புமணி ராமதாஸ் 58-வது பிறந்தநாள்- திருச்சி பாமக மாவட்டச் செயலாளர் திலீப் குமார் தலைமையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

0

திருச்சி 8.10.2026

அன்புமணி ராமதாஸ் 58-வது பிறந்தநாள்- திருச்சி பாமக மாவட்டச் செயலாளர் திலீப் குமார் தலைமையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

திருச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் 58-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட செயலாளர் திலீப் குமார் தலைமையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், கண் பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவமாக நுரையீரல் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.

முகாமில் கலந்து கொண்ட பயனாளிகள் அனைவருக்கும் இலவசமாக மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட செயலாளர் திலீப் குமார் கூறுகையில், அன்புமணி ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, 108 ஆம்புலன்ஸ் திட்டம், புகையிலை ஒழிப்பு உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்ததை நினைவுகூரும் வகையில்,

பொதுமக்கள் ஆரோக்கியமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த மருத்துவ முகாம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், இந்த மாதம் முழுவதும் தொடர்ந்து இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.