Trending News Tamil News Website In Trichy

லிட்டருக்கு ரூ.40 மட்டுமே வழங்க முடியும்- முதல்வர் அறிவித்த 44 கொள்முதல் விலையை தர மறுக்கும் அதிகாரிகள் – திருச்சி விவசாயிகள் வேதனை

0

திருச்சி – 05.10.2026

முதல்வர் அறிவித்த ரூ 44 பால் கொள்முதல்விலை விவசாயிகளுக்கு வழங்கப்படாத அவலம் – விவசாயிகள் வேதனை

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின்கீழ் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 44 ரூபாயாக உயர்த்தி அறிவித்தார், இது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது

இந்நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட புங்கனூர் மற்றும் பிராட்டியூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பால் கூட்டுறவு சொசைட்டிகளில் 40 ரூபாய் மட்டுமே வழங்குவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர், எனவே முதல்வர் அறிவித்தபடி 44 ரூபாய் வழங்க வேண்டும் என இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் இது குறித்து கேட்டால் டி ஆர் ஓ மற்றும் அதிகாரிகள் இந்தத் தொகையை தான் கொடுக்க வேண்டும் என கூறுவதாகவும், ஒரு ரூபாய் 85 காசு சொசைட்டி செலவுக்காக பிடித்த செய்துகொள்வதாகவும், எஞ்சிய 2.15 காசு ஊக்க தொகை என்னை ஒரு மாதம் கழித்து போன தொகையுடன் சேர்த்து வழங்குவதாகவும் கூறி அதிகாரிகள் பிடித்து வைத்துக்கொள்வது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பினர் முதலமைச்சர் நிர்ணயம் செய்த விலையை விவசாயிகளுக்கு வழங்காமல் அதிகாரிகள் சதி செய்கின்றனர், முதலமைச்சர் அவர்கள் இது போன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பால் கொள்முதல் தொகையை முழுவதுமாக பெற்று தர வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்,

Leave A Reply

Your email address will not be published.