Trending News Tamil News Website In Trichy

திருச்சியில் பரபரப்பு குத்துவிளக்கு ஏற்றுவதில் காங்கிரஸ் MP – த.வெ.க. MLA இடையே மேடையில் மோதல்

0

திருச்சி 5.10.2026

காங்கிரஸ் எம்.பி. – த.வெ.க. எம்.எல்.ஏ. இடையே மேடையில் மோதல்

திருச்சியில் அரசு சார்பில் நடைபெற்ற சமூக விழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. மற்றும் த.வெ.க. எம்.எல்.ஏ. நவல்பட்டு விஜய் இருவருக்கும் இடையே மேடையில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வின்போது, எம்.பி. கிறிஸ்டோபரிடம் இருந்து எம்.எல்.ஏ. விஜய் மெழுகுவர்த்தியைப் பிடுங்கி ஏற்ற முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

இந்நிலையில், அமைச்சர் ரமேஷ் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.