திருச்சியில் ஆமை வேகத்தில் நடக்கும் பாலப் பணிகள்… ஆமை விட்டே போராட்டம் நடத்திய இளைஞர்கள்
திருச்சி 5.10.2026
திருச்சியில் ஆமை வேகத்தில் நடக்கும் பாலப் பணிகள்… ஆமை விட்டே போராட்டம் நடத்திய இளைஞர்கள்
திருச்சியில் கோட்டை ரெயில்வே மேம்பாலம், டவுன் ரயில்வே ஸ்டேசன் ரெயில்வே மேம்பாலம், ரெயில்வே சந்திப்பு பாலம், எடமலைப்பட்டி புதூர் கோரையாற்று பாலம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை காவேரி ஆற்றுப்பாலம், மாம்பழச்சாலை – சிந்தாமணி புதிய பாலம் ஆகிய பாலப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் திருச்சி மாநகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைத்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் பாலப் பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தியும், ஆமை வேகத்தில் நடந்து வரும் கட்டுமான பணிகளை கேலி செய்யும் விதத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆமை விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணிகளை நிறைவு செய்யாத ஒப்பந்ததாரர்கள் மீதும் அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
பாலப் பணிகளை விரைந்து முடிக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் எச்சரித்தனர்
