Trending News Tamil News Website In Trichy

நேற்று 24 கிலோ… இன்று 23 கிலோ- 2 நாட்களில் 47 KG குட்கா பறிமுதல் – திருச்சி ரயில்வே போலீசாரின் மாஸான அதிரடி வேட்டை

0

திருச்சி 3.10.2026

 *நேற்று 24 கிலோ… இன்று 23 கிலோ – 2 நாட்களில் 47 கிலோ குட்கா பறிமுதல் – திருச்சி ரயில்வே போலீசாரின் அதிரடி வேட்டை*

தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் ரயில் மூலமாக கடத்தப்படுவதை தடுக்கும் வகையில், திருச்சி இருப்புப் பாதை காவல் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பச்சேரா IPS அவர்களின் உத்தரவின்பேரில் தீவிர கண்காணிப்பு மற்றும் சிறப்பு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில், இன்று (03.10.2026) முதல் நிலைக் காவலர் கண்ணதாசன் (எண். 517), காவலர்கள் ரெங்கபாஷ்யம் (எண். 950) மற்றும் ராஜ்குமார் (எண். 1560) ஆகியோர் அடங்கிய ரயில்வே தனிப்படை போலீசார் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி வரை சிறப்புச் சோதனையில் ஈடுபட்டனர்.புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற வண்டி எண் 20849-ல் (மாலை 16.25 மணிக்கு திருச்சி ரயில் நிலைய நடைமேடை எண் 8-க்கு வந்தடைந்தது) பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை போலீசார் தீவிரமாகச் சோதனை செய்தனர். அப்போது, ரயிலின் முன்புற பொதுப்பெட்டியின் இருக்கைக்குக் கீழே கேட்பாரற்று கிடந்த ஒரு சாக்கு பையைக் கைப்பற்றி சோதனை செய்ததில், அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து, சாக்கு பையில் இருந்த 23 கிலோ எடையுள்ள குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, மேல் விசாரணைக்காக திருச்சிராப்பள்ளி இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்து ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று நடைபெற்ற சோதனையில் 24 கிலோ தடை செய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், இன்று மேலும் 23 கிலோ குட்காவை ரயில்வே போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி ரயில்வே போலீசாரின் இந்தத் தொடர் அதிரடி வேட்டை பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.