உணவுப் பொருட்களை தடுத்த காவல்துறை- சமயபுரத்தில் 3-வது நாளாக தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்
திருச்சி- 17.09.26
பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருச்சியில் 50 விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் – விவசாயிகள் போராட்டத்தில் சமைப்பதற்காக அரிசி கொண்டு வந்ததை காவல்துறை அனுமதிக்காததால் வாக்குவாதம்
தமிழக வெற்றி கழகம் தங்களுடைய தேர்தல் வாக்குறுதியாக சிறு குரு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் பெரிய விவசாயிகளுக்கு பாதி அளவு பயிர் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்தார்கள்.
ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்பு அதனை செயல்படுத்தாமல் பணத்தின் அடிப்படையில் விவசாயிகள் பயிர் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார்கள். அதற்கு விவசாயிகள் ஆரம்ப கட்டம் முதலே எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அதனால் தமிழக அரசு ஆரம்பத்தில் 50,000 வரை கடன் வாங்கி உள்ள விவசாயிகளுக்கு முழுமையாக தள்ளுபடி எனவும், பின்னர் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பின்பு 75 ஆயிரம் ஆக உயர்த்தி அறிவித்தது.
ஆனால் அதையும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பல இடங்களில் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தான் நேற்றைய முன்தினம் 15ஆம் தேதி 50க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் அருகே காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான உணவுகளை சமைப்பதற்காக மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை எடுத்து வந்தனர் அதனை காவல்துறை தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. விவசாயிகள் இன்று கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தை அறிவித்து அதனை ஒத்தி வைத்தனர் இந்த நிலையில் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றால் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அஞ்சி அந்த உணவுப் பொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தன தொடர்ச்சியாக போராட்டத்தை கொடுக்கும் வேலையில் தமிழக அரசு ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.