இமானுவேல் சேகரன் நினைவு நாள்- திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி 11.09.2026
*இமானுவேல் சேகரன் நினைவு நாள்- திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை*
சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 69-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் அமைந்துள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தியாகி இம்மானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.