எம்.ஐ.டி பொறியியல் கல்லூரியில் 29-வது முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா
திருச்சி 10.09.2026
*எம்.ஐ.டி பொறியியல் கல்லூரியில் 29-வது முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா*
எம்.ஐ.டி பொறியியல் கல்லூரியில் 2026-27-ஆம் கல்வியாண்டின் 29-வது முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா 10.09.2026 அன்று கல்லூரி கலைையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு எம்.ஐ.டி கல்வி நிறுவனங்களின் தலைவர் Er. A. முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கி கெளரவித்த அவர் தனது தலைமை உரையில், “இக்கல்லூரியில் பயிலவிருக்கும் இந்த நான்கு ஆண்டுகள், கல்லூரி வழங்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, நூலகத்தின் மூலம் உங்கள் அறிவையும் சிந்தனைத் திறனையும், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் உங்கள் உடல் வலிமையையும் மன உறுதியையும் மேம்படுத்திக் கொள்ளுங்கள்” என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
எம்.ஐ.டி கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் டாக்டர் எம்.ஒய். அப்துல் ஜலீல் தனது வாழ்த்துரையில், “மாணவர்களாகிய நீங்கள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையினை ஏற்படுத்திக் கொண்டு, ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் என்ன கற்றுக் கொண்டோம் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்” என்று கூறினார்.கல்லூரியின் முதல்வர் முனைவர் A. நவீன் சேட் அவர்கள் தனது வரவேற்பு/வாழ்த்துரையில், “பல்வேறு தளத் தலைவர்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களாகிய நீங்கள் இக்கல்லூரியில் பயிலக்கூடிய நாட்களில் உங்களைச் செதுக்கிக்கொண்டு பேராசிரியர்களோடு தொடர்புபடுத்தி, வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றும், கண்டத்தோடு சேர்ந்து இடப்பட்டு கல்வி பயின்றால் நீங்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம்” என்றும் வலியுறுத்தினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட Career Guidance & Analyst நிபுணர் திரு. ஜெயபிரகாஷ் காந்தி தனது துவக்க உரையில், “இன்றைய சிந்தனை எதிர்காலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் உங்களுடைய நோக்கம் இருக்க வேண்டும். சமூகத்தின் தேவைக்கேற்ப மாணவர்கள் தங்களின் தொடர்புத் திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். கேள்விகள் மூலமாகத்தான் சிந்தனைத் திறன் எழிகிறதே தவிர பதில்கள் மூலமாக இல்லை என்பதை மாணவர்களுக்கு வலியுறுத்தினார்.
நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றால் உங்களுடைய பெற்றோர்களின் ஆசியைப் பெற வேண்டும்” என்று அறிவுரை வழங்கினார்.இவ்விழாவில் பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.கல்லூரியின் மேலாண்மைத் துறைப் பேராசிரியர் முனைவர் T. உமாமகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். நிறைவாக, மேலாண்மைத் துறைத் தலைவர் முனைவர் R. ஆண்டனி பிரகாஷ் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.