திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த ரேலா கல்லீரல் மாற்று சிகிச்சை மையம் தொடக்கம்
திருச்சி 5.07.2026
திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த ரேலா கல்லீரல் மாற்று சிகிச்சை மையம் தொடக்கம்
திருச்சி மற்றும் டெல்டா பகுதி மக்களின் நீண்ட நாள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கல்லீரல் சிகிச்சை மற்றும் உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவின் முன்னணி மருத்துவமனையான ரேலா மருத்துவமனை தனது புதிய சிகிச்சை மையத்தை திருச்சியில் உள்ள ஸ்வேதா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தொடங்கியுள்ளது.
சென்னை ரேலா மருத்துவமனையில் வழங்கப்படும் அதே உயர்தர கல்லீரல், குடல்-இரைப்பை சிகிச்சைகள் மற்றும் உறுப்புமாற்று அறுவை சிகிச்சைகள் இனி திருச்சியிலேயே கிடைக்கும்.
கல்லீரல் சிகிச்சைக்காக பிரத்யேக 14 படுக்கைகள், ICU, HDU, நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் திறந்தநிலை அறுவை சிகிச்சையை தவிர்க்க உதவும் அதிநவீன தேர்ட் ஸ்பேஸ் எண்டோஸ்கோபி வசதிகள் உள்ளன.
டெல்டா மாவட்ட நோயாளிகள் இனி தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சைகளுக்காக சென்னைக்கு பயணிக்க வேண்டிய அவசியமில்லை
இந்த புதிய மையத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு, இந்த மாத இறுதி (ஜூலை 2026) வரை இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன
முன்பதிவிற்கு 8925872235
மருத்துவக் குழு மற்றும் நிபுணர்கள்: இந்த மையத்தின் சிகிச்சை திட்டங்களை சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் முகமது ரேலா 6000-க்கும் மேற்பட்ட மாற்று அறுவைசிகிச்சைகளை செய்தவர் மற்றும் ரேலா மருத்துவமனையின் முதுநிலை மருத்துவக் குழுவினர் வழிநடத்துகிறார்கள்.கல்லீரலியல் மற்றும் இரைப்பை குடல் மருத்துவக் குழு டாக்டர் S.N.K. செந்தூரன் (நிறுவனர், ஸ்வேதா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை) டாக்டர் தினேஷ் ஜோதிமணி, டாக்டர் நவீன் குமார் மாரண்ணன் உள்ளனர்.
பேராசிரியர் முகமது இதுகுறித்து கூறுகையில்..
ரேலா நோயாளிகள் சென்னைக்கு வரும்போது நோய் முற்றிய நிலையிலேயே வருகின்றனர். உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையை நோயாளிகளுக்கு அருகிலேயே வழங்கி, ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்து உயிர்களைக் காப்பதே எங்களின் இலக்கு.”
டாக்டர் S.N.K. செந்தூரன் பேராசிரியர் முகமது ரேலா தலைமையிலான குழுவின் நிபுணத்துவத்தை இப்பகுதி மக்களுக்கு அருகிலேயே கொண்டு வந்துள்ளோம். இது நோயாளிகளின் பயண அலைச்சலை கணிசமாக குறைக்கும். 2019 முதல் 2,000-க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ள ரேலா மருத்துவமனையை, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN) அங்கீகரித்து கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.