Trending News Tamil News Website In Trichy

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்-திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க-வினர் அன்னதானம்

0

திருச்சி 22.06.2026

முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா – அன்னதானம் வழங்கி சிறப்பித்த 34 வது வார்டு நிர்வாகிகள்

தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் கிழக்கு தொகுதிக்குட்பட்ட 34 வது வார்டில் வட்டச் செயலாளர் சேக் முகமது மற்றும் நிர்வாகிகளின் ஏற்பாட்டின் பேரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை திருச்சி கிழக்கு மாநகர் மாவட்ட கழக செயலாளர் தர்கா சௌகத் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜெரால்டு மில்டன் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தனர் இந்நிகழ்வில் பகுதி செயலாளர் சூர்யா, சிவா மற்றும் 34-வது வார்டு நிர்வாகிகள் தினேஷ்குமார், கணேசன், சுரேந்தர், யோகாம்பாள், சரவணன், மகேந்திரன், வீரா, மணிகண்டன், STR பிரசாத், கௌசல்யா, ராஜதுரை, சுந்தர் ராஜா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.