Trending News Tamil News Website In Trichy

*மண்ணச்சநல்லூர் தொகுதியில் மதச்சார்பற்ற நல்லிணக்க முழக்கம்- வேட்பாளர் கதிரவனுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு*

0

திருச்சி

*மண்ணச்சநல்லூர் தொகுதியில் மதச்சார்பற்ற நல்லிணக்க முழக்கம்- வேட்பாளர் கதிரவனுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு*

மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கதிரவன் அவர்கள், இன்று தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

வெங்கங்குடி, இனாம் சமயபுரம், இருங்களூர் மற்றும் கொணலை ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்தின் போது, பெண்கள் ஆரத்தி எடுத்தும், பொதுமக்கள் மலர் தூவியும் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தப் பிரச்சாரத்தின் சிறப்பம்சமாக, வேட்பாளர் கதிரவன் அவர்களுக்கு வீரத்தின் அடையாளமான வெற்றி வேல் வழங்கப்பட்டது.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சமயங்களின் அடையாளங்கள் பொறிக்கப்பட்ட சமூக நல்லிணக்கப் புகைப்படங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மதங்களைக் கடந்து மனிதநேயத்தோடு மக்கள் வழங்கிய இந்த வரவேற்பு, மண்ணச்சநல்லூர் தொகுதி மதச்சார்பற்ற சக்திகளின் கோட்டை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது

இந்த வாக்கு சேகரிப்பின் போது:ஒன்றிய கழகச் செயலாளர்கள்,கிளைச் செயலாளர்கள்,கழக முன்னோடிகள் மற்றும் நிர்வாகிகள் தோழமைக் கட்சிகளின் மாவட்ட மற்றும் வட்டார நிர்வாகிகள்எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டு, வீதி வீதியாகச் சென்று தமிழக அரசின் சாதனைகளை விளக்கி உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.

வெற்றிச் சின்னம் உதயசூரியன் மக்கள் பணி செய்ய கதிரவன் என்ற முழக்கங்களுடன் மண்ணச்சநல்லூர் தொகுதி தேர்தல் களம் களைகட்டியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.