திருச்சி கிழக்கு தொகுதி தவெக வேட்பாளர் விஜய்க்கு ஆதரவாக மலைக்கோட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு
திருச்சி 7.04.2026

*திருச்சி கிழக்கு தொகுதி தவெக வேட்பாளர் விஜய்க்கு ஆதரவாக மலைக்கோட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு*

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி மாவட்டத்தில் கட்சியின் தேர்தல் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தவெக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டப் பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் அவர்களின் ஆலோசனையின் பேரில், மலைக்கோட்டை மாநகர் பகுதி இணைச் செயலாளர் ராக்போர்ட் ராஜேஷ் தலைமையில் இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வு நடைபெற்றது.
தார்நல்லூர் மற்றும் பூக்கொல்லை ஆகிய பகுதிகளில் தவெக மலைக்கோட்டை பகுதி நிர்வாகிகள் வீதி வீதியாகச் சென்று, திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் விஜய் அவர்களுக்கு ஆதரவு திரட்டினர். கட்சியின் கொள்கைகளையும், வேட்பாளரின் வெற்றி வாய்ப்புகளையும் பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்வில் தவெக மலைக்கோட்டை பகுதி நிர்வாகிகள் தீபா,லோகேஸ்வரி,ஜபின்,சத்யா,வைஷ்ணவி,மோனிகா வேலுமணி,ஹரிதா,வள்ளி, ஆகியோர் தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.
மேலும் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வேட்பாளர் விஜய்க்கு வாக்களிக்குமாறு நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.
தவெக நிர்வாகிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்தத் தீவிரப் பிரச்சாரம், அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த பிரச்சாரத்தின் போது மாவட்ட அமைப்பாளர் உறுப்பினர் சேர்க்கை அணி முகுந்தன் உள்ளிட்ட TVK நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.