திருச்சி வருகை தந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, அண்ணா நகர் பகுதி மகளிர் அணி அமைப்பாளர் S. யாஸ்மின் பொன்னாடை கொடுத்து வரவேற்றார்.
திருச்சி.. 18.11.25

திருச்சி வருகை தந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, அண்ணா நகர் பகுதி மகளிர் அணி அமைப்பாளர் S. யாஸ்மின் பொன்னாடை கொடுத்து வரவேற்பு.

இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மதுரையில் நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகை தந்தார்.
அவருக்கு கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே. என்.நேரு மற்றும் தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..

இந்நிலையில் திருச்சி வருகை தந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, அண்ணா நகர் பகுதி மகளிர் அணி அமைப்பாளர் S. யாஸ்மின் பொன்னாடை கொடுத்து வரவேற்றார்.
இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன்,காடுவெட்டி தியாகராஜன்,பழனியாண்டி, தமிழரசி, முத்துராஜா,மாநகர செயலாளர் மாநகர மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் கே கே செல்லபாண்டியன்.கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன்,உள்ளிட்ட திமுகவினர் தமிழ்நாடு துணை முதலமைச்சருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்..