Trending News Tamil News Website In Trichy

🚨 எம்.பி அருண் நேரு பிறந்த நாளை முன்னிட்டு மலைக்கோட்டை மாநகரில் பிரம்மாண்ட கட்அவுட்*

0

*🚨 எம்.பி அருண் நேரு பிறந்த நாளை முன்னிட்டு மலைக்கோட்டை மாநகரில் பிரம்மாண்ட கட்அவுட்*

திருச்சி மாநகரில் தற்போது பிரம்மாண்ட கட்அவுட் ஒன்று அனைத்து அரசியல் பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமைச்சர் கே.என் நேருவின் மகனும், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான எம்.பி அருண் நேரு அவர்களின் பிறந்தநாளை (டிசம்பர் 12) முன்னிட்டு, இந்த மாபெரும் விளம்பரப் பதாகை அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக திருச்சி மாவட்டத்தின் ஒட்டுமொத்த தி.மு.க. அரசியல் நகர்வுகளையும், அரசுத் திட்டச் செயலாக்கங்களையும் கட்டுப்படுத்தும் ஆளுமைத் திறமை அருண் நேருவிடம் அதிகம் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள மெகா ஸ்டார் திரையரங்கம் அருகில் இந்த விளம்பர பதாகையை கே.என்.அருண் நேரு பாசறை என்ற வாசகத்துடன் இந்த பிரம்மாண்ட கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது

இந்த கட்அவுட்டின் மையக்கருத்து வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில், டெல்லியில் உள்ள செங்கோட்டையை (Red Fort) பின்னணியாகக் கொண்டு, “மலைக்கோட்டையே வியக்கும் திருச்சியின் செங்கோட்டையே!” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

திருச்சி தி.மு.க.வின் அரசியல் செல்வாக்கையும், எம்.பி அருண் நேருவுக்கு மாநகரில் உள்ள ஆதரவையும் இந்த விளம்பரப் பதாகை மிகத் தெளிவாக வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது வெறும் பிறந்தநாள் வாழ்த்து மட்டுமல்லாமல், திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க.வின் எதிர்கால அரசியல் அசைவுகளைக் குறிப்பதாகவும் பேசப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.